முதல்வர் பாதுகாப்பு பணிக்கு செல்ல இருந்த போலீசார் தற்கொலை முயற்சி…

0
Follow on Google News

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் விக்னேஷ்வரமூர்த்தி. விக்னேஷ்வரமூர்த்திக்கு 28 வயதைக் கடந்த நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் இவர் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2ம் நிலை காவலராக பணியாற்றி வரும் கணவனை பிரிந்த பெண் காவலருடன் தொடர்பு ஏற்பட்டு இருவரும் திருமணம் ஆகாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

கணவன் மனைவி என்று கூறி சேலம் கேம்ப் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து சந்தேசமாக குடும்ப நடத்தி வந்த நிலையில், விக்னேஷ்வரமூர்த்திக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கூறி அடிக்கடி அந்த பெண் காவலருக்கு சந்தேகம் ஏற்பட்டு, இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்றது. நேற்று எப்போதும் போல வாக்குவாதம் முற்றியது. பின்னர் பெண் காவல் எப்போதும் போல தன்னுடைய பணிக்கு சென்று விட்டார்.

ஆனால் சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ்வரன் மூர்த்திக்கு நேற்று மேட்டூர் வரும் முதல்வரின் பாதுகாப்பு பணிக்கு சென்று இருக்க வேண்டும். ஆனால் அவர் பணிக்கு செல்லாமல் மதுவில் பாத்திரம் விளக்கும் லிக்யூடையும், தின்னரையும் கலந்து குடித்து அவரது சேலத்து கேம்ப் வீட்டில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். அவரது வீட்டிற்கு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

கருமலை காவல் நிலையத்தில் இருந்த விரைவில் விக்னேஷ்வரமூர்த்தியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ்வரமூர்த்தி முதல்வரின் பாதுகாப்பு பணிக்கு செல்லாததால் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். போலீசார் விக்னேஷ்வரமூர்த்தி தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.