காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் மாநிலத்தில் இரண்டாக பிரித்து லடாக் தனி மாநிலமாக உருவான போது நாடு முழுவதும் பெரும் ஆதரவு இருந்து வந்தாலும், ஒரு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த சமயத்தில் இது பெரும் விவாத பொருளாக மாறிய போது, ஆங்கில தொலைக்காட்சி ஊடக விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக செய்தி தொடர்பாளர் சரவணன், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே கிடையாது என்று பேசினார்.
இந்த பேச்சுக்கு அப்போதே, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கடும் கண்டனத்தை பதிவு செய்து, எப்படி நீங்கள் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே கிடையாது என்று சொல்லலாம் என கடும் கோபத்துடன் கேள்வி எழுப்ப, பதில் சொல்ல முடியாமல் அந்த விவாத நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் திமுக செய்தி தொடர்பாளர் சரவணன். இது ஆங்கில தொலைக்காட்சி விவாதம் என்பதால் இந்தியா முழுவதும் இது பெரும் சர்ச்சையானது.
இதன் பின்பு திமுக தேசத்துக்கு எதிரான கட்சி என்கிற ஒரு தோற்றம் உருவானது. மேலும் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை எதிர்க்கிறேன் என்கிற பேரில் இந்திய ராணுவத்தையும்,இந்திய தேசத்தையும் இழிவு செய்யும் நோக்கில் திமுகவினர் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வந்தது திமுகவுக்கு அவ பெயரை பெற்று தந்த நிலையில், சமீப காலமாக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்து வந்தனர் திமுகவினர்.
இந்நிலையில் இந்திய-சீன எல்லையை ஒட்டியுள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதில் இந்திய ராணுவத்தினர் தேசிய கொடியை ஏந்தி கடந்த புத்தாண்டு அன்று எடுத்த புகைப்படம் செய்தி ஊடகங்களில் வெளியானது. இந்த செய்தியை மேற்கோள் காட்டி, திமுக ஐடி பிரிவு மாநில துணை தலைவர் இசை தனது சமூக வலைதள பக்கத்தில் சீன ராணுவத்தினர் சீன நாட்டு கொடியை தாங்கி பிடித்த புகைப்படத்தை வெளியிட்டும் இது உங்கள் சொத்து என வடிவேலு நகைச்சுவை காட்சியில் வரும் வசனத்தை பதிவு செய்துள்ளார்.
இது ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், தேசியவாதிகள், ராணுவத்தில் பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தேசத்தை காக்கும் ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சை படுத்தும் விதத்தில் பதிவு செய்துள்ள திமுக நிர்வாகி மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடும் எதிப்பு கிளம்பியுள்ள நிலையில், தொடர்ந்து இந்திய ராணுவத்துக்கு, தேசத்துக்கு எதிரான கட்சி திமுக என்பது இந்த திமுக மாநில நிர்வாகி பதிவு பிரதிபலிப்பதாக கருத்துக்கள் நிலவி வருவது குறிப்பிடதக்கது.