மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கான வேளாண் மசோதா சட்டத்தை எதிர்த்து, டெல்லியில் பஞ்சாப்பை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர், டெல்லியில் டென்ட் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு மஜாஜ் மிஷின், உயர்ரக உணவுகள் என அணைத்து ஏற்பாடுகளும் பிரமாண்ட முறையில் நடந்து வந்ததை காண முடித்து, இது போன்ற நிகழ்வுகளை பார்த்தவர்கள் இது விவசாயிகள் போராட்டம் தானா என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினார்கள்.
இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வந்த விவசாயிகளின் போராட்டம் குடியரசு தினத்தன்று கலவரமாக வெடித்தது, இதில் போலீசார் மீது கடுமையாக தாக்கிய கலவரக்காரர்கள், செங்கோட்டையில் நுழைந்து தேசிய கொடியை வீசி எறிந்தவரக்ள் அங்கே காலிஸ்தான் கொடியை பறக்க விட்டனர், இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தீப் சித்து பிரதமர் மோடி உடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை அதிகம் பகிர்ந்துள்ள எதிர்க்கட்சிகள், கலவரத்தில் ஈடுபட்டுள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள், பாஜகவினர் என செய்தியை பரப்பி வருகின்றனர், இந்த புகைப்படம் குறித்து உண்மையை ஆராய்ந்ததில். இந்த புகைப்படத்தில் பிரதமர் மோடியுடன் இருக்கும் பஞ்சாப் நடிகர் தீப் சித்து, 2019 லோக்சபா தேர்தலில் பாஜக தலைவரும் மற்றும் பாலிவுட் நடிகருமான சன்னி தியோலுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.
அதன் பின்பு, காலிஸ்தான் தீவிரவாதிகளால் தீப் சித்து மூளைச்சலவை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது, பின்னர் நான் பாஜகவிற்காக தேர்தல் பிரச்சாரம் செய்தது தவறு அதனால் மிகவும் கஷ்டப்படுகிறேன் என்று வெளிப்படையாக ஊடகங்கள் வாயிலாக டிசம்பர் 7, 2020 அன்று கூறியுள்ளார் தீப் சித்து. அதன் பின்பு தான் தீப் சிந்து முழுமையாக காலிஸ்தான் ஆதரவாளராக மாறியுள்ளார், அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் தீப் சித்து தொடர்பு வைத்து இருந்தார் என்று ஒரு வாரத்திற்கு முன்பு (ஜனவரி 17, 2021 அன்று) NIA தேசிய புலனாய்வு அமைப்பு அவரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் எதிர்க்கட்சிகள் டெல்லியில் நடத்த போராட்டம் கலவரமாக வெடித்ததை தொடர்ந்து, கலவரத்தில் ஈடுபட்டது மோடியின் ஆட்கள் தான் என்று பிரதமர் மோடி உடன் தீப் சிந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து திட்டமிட்டு தவறான செய்திகளை பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது. காலிஸ்தான் தீவிரவாதிகளை ஆதரிக்கும் பல பாடகர்கள் மற்றும் நடிகர்கள் பஞ்சாப்பில் உள்ளனர். உதாரணமாக ஹார்ட் கவுர் மற்றும் ஜாஸி பி ஆகியோர் மறைமுகமாக இருந்து காலிஸ்தான் தீவிரவாதிகளை ஆதரித்தவர்கள் பின்பு வெளிப்படையாக ஆதரித்தவர்கள் தான். அவர்கள் வரிசையில் தீப் சித்து ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .