தமிழன் பிரசன்னா எடுத்த புகைப்படம்… உடனே எச்சரித்து அப்புறப் படுத்த உத்தரவிட்ட முக ஸ்டாலின்.!

0
Follow on Google News

தமிழக முதல்வராக நேற்று பதவி ஏற்று கொண்டார் திமுக தலைவர் முக ஸ்டாலின், கிண்டி ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடந்த விழாவில், கொரோனா காரணமாக பதவியேற்பு விழா மிக எளிமையாக நடந்தது. அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஆளுநர் மாளிகைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்

முதல்வராக பதவியேற்றதும் மு.க.ஸ்டாலின் கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வரின் அலுவலகத்துக்கு சென்று பொறுப்பேற்க புறப்பட்டார், அப்போது சாலையின் இரண்டு பக்கமும் திமுக தொண்டர்கள் கூடி நின்று மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் பதவி ஏற்ற 33 அமைச்சர்களும் தலைமை செயலகம் நோக்கி புறப்பட்டனர்.

தலைமை செயலகத்தில் நுழைவாயிலில் முக ஸ்டாலின் கார் நுழைந்த போது அங்கே அவரை வரவேற்கும் விதத்தில் நுழைவாயில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, அதனை தொடர்ந்து தலைமை செயலக கட்டட்டத்தின் ஒரு புறம் கருணாநிதி பேனர்ம் , மறு புறம் முக ஸ்டாலின் பேனர்ம் இடம் பெற்றிருந்தது, இந்த பேனர் இருந்த இடத்தில் ஏற்கனவே மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா பேனர் இருந்தது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் தலைமை செயலகம் வந்த முக ஸ்டாலின் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து உடனே தன்னுடை பேனர் மற்றும் கருணாநிதி பேனரை அப்புற படுத்த உத்தரவிட்டுள்ளார், மேலும் அரசு இடத்தில் இது போன்று செய்ய வேண்டாம் என்றும், ஆடம்பரத்தை தவிக்க உத்தரவிட்டுள்ளார், இதனை தொடர்ந்து தலைமை செயலகத்தில் இருந்த ஸ்டாலின் மற்றும் கருணாநிதி பேனர் அப்புற படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக முக ஸ்டாலின் தலைமை செயலகம் வருவதற்கு முன்பு அங்கே வந்த திமுக பேச்சாளர் பிரசன்னா அங்கே அப்புற படுத்துவதற்கு முன்பு இருந்த முக ஸ்டாலின் பேனர் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு, இந்த படம் என்‌ வாழ்வில் மிக முக்கியமானது. இந்த படம் நான் எடுக்கும் போது அங்கிருந்த எல்லோரும் கேட்டனர், சார்‌ நீங்க தலைவர் கிட்டயே இருக்கிறவர் ,ஏன் இந்த பேனர்ல போய் படம் எடுக்கிறீங்கனு..

அவர்களுக்கு நான் சொன்ன பதில், இந்த இடத்தில் ‌தமிழகத்தை தரம் தாழ்த்தி நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்தும் அகற்றப்படாத ஜெயாவின் படம் இருந்தது., அந்த இடத்தில் இன்று தமிழகத்தின் தன்மானத்தை நிமிர்த்தி தலைவரின் படம் இன்று கோட்டையை அலங்கரிக்கின்றது , மகிழ்ச்சியில் தவழ்கின்றேன் என அவருடைய சமூக வலைதளத்தில் தமிழன் பிரசன்னா பதிவு செய்த சில மணி நேரத்தில் அந்த பேனர் முக ஸ்டாலின் அதிரடி உத்தரவால் அப்புறபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.