மத்திய இணை அமைச்சரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு.! பாஜக நிர்வாகி விடுதலை… திமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு.!

0
Follow on Google News

திண்டுக்கல் மாவட்டத்தில் பாஜக நிர்வாகி மற்றும் திமுக நிர்வாகி இருவருக்கும் சமூக வலைதளத்தில் நடத்த அரசியல் விமர்சனம், திமுக நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் இன்று அதிகாலை பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்து செல்லபட்டார், இந்த தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ், பாஜக நிர்வாகியை கைது செய்த காவல் நிலையம் சென்று தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துரைத்தார்.

விமர்சனம் செய்ய அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது, திமுக நிர்வாகி விமர்சனத்துக்கு எதிர்வினையாற்றியதற்கு கைது செய்வது அடக்குமுறை என்றும், பாஜகவை அநாகரிகமாக விமர்சனம் செய்த திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், கைது செய்த பாஜக நிர்வாகியை விடுதலை செய்ய வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் கைது செய்த போலீசாரிடம் எடுத்து கூறினார்.

இதனை தொடர்ந்து பாஜக துணை தலைவர் அண்ணாமலை ஐபிஸ், பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமார், பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, போன்ற பாஜக முக்கிய தலைவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துரைத்தனர், இருந்தும் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகியை விடுதலை செய்வதில் தாமதம் ஏற்பட்டது, தொடர்ந்து பாஜகவினர் அடுத்தடுத்து முயற்சியில் இறங்கினர்.

இதனை தொடர்ந்து இந்த விவகாரம் மத்திய உள்த்துறை இணையமைச்சர் கிஷான் ரெட்டி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே தமிழக டிஜிபியை தொடர்பு கொண்டு பேசிய மத்திய உள்த்துறை இணையமைச்சர் இந்த சம்பவம் குறித்து கேட்டு அறிந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்பு பாஜகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சபந்தப்பட்ட திமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்த பாஜக நிர்வாகி விடுதலை செய்யப்பட்டார்.

இது குறித்து பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார் தனது சமூக வலைதளப்பாக்கத்தில், தம்பி சரவணன் விடுதலை செய்யப்பட்டார்! பிரதமரை அவதூராக முகநூலில் பதிவு செய்த திமுகவினர் மீது அதே காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் கொடுத்ததன் பேரில் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது திமுகவினர் இனியாவது விளையாட்டுக்களை விடுத்து ஆக்கபூர்வமாக மக்கள் பணியில் கவனம் செலுத்தவும் என அறிவுறுத்தியுள்ளார்.