கொரோனா தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள இந்த வேளையில் பெட்ரோல் விலை மட்டும் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது பல மாவட்டங்களில் சதம் அடித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். உலக முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் மிக பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இதில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா பரவலைத் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வேலைகளை இழந்து மக்கள் ஒரு வேளைக்கான பசியை போக்க போராடி வருகின்றனர். இந்த நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவைகள் விலை உயர்ந்து கொண்டே போகிறது. சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் வாகன போக்குவரத்திற்கான பெட்ரோல் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட தடவைக்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளனர். இந்தியாவில் பல மாநிலங்களில் சதம் அடித்தது பெட்ரோல் விலை. ஆனால் மதுரையில் பெட்ரோல் லிட்டருக்கு 92.40 காசு இருந்தது. நேற்று மதுரையில் பெட்ரோல் விலை சதமடித்த அதை அடித்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்