பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரையை திருமணம் செய்து ஏமாற்றியவர் திராவிட சித்தாந்தம் கொண்ட தியாகு, இதனால் ஒரு ஆண் குழந்தையுடன் பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் தனது வாழ்க்கையை நடத்தி வரும் கவிஞர் தாமரை, திராவிட கழகத்துக்கு எதிராகவும் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக தொடர்ந்து ஆதாரத்தை வெளியிட்டு அவர்கள் முகத்திரையை கிழித்து வருகின்றவர் கவிஞர் தாமரை.
இவரிடம் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளானது திராவிட கழகத்தை சேர்த்த சுப.வீரபாண்டியன் தான், மேலும் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிய தியாகுவின் தில்லுமுல்லு அனைத்துக்கு உதவியாக இருந்தது சுப.வீரபாண்டியன் தான் என பகிரங்கமாக குற்றசாட்டுகளை ஆதாரத்துடன் வெளியிட்டு வருகின்றவர் கவிஞர் தாமரை. இந்நிலையில் கடந்த செப் 17ம் தேதி பெரியார் பிறந்த தினம் கொண்டாடபட்டது, அப்போது சிலர் பெரிய படத்துக்கு பால் அபிஷேகம் செய்த காட்சிகள் வெளியானது.
அந்த புகைப்படத்தை வெளியிட்டு கவிஞர் தாமரை தெரிவித்ததாவது, பகுத்தறிவு எங்கே ??? ‘பெரியாரோடு திராவிடர் கழக வரலாறு முடிகிறது’ என்று முன்னம் ஒரு பதிவில் எழுதியிருந்தேன். அதற்கு என்மேல் பாய்ந்து கொண்டு வந்தார்கள். இதோ, இங்கே குழி தோண்டி, பாலும் ஊற்றியாயிற்றே ! என பெரியாருக்கு பால் அபிஷேகம் செய்யும் புகைப்படத்தை சுட்டி கட்டியுள்ள கவிஞர் தாமரை, மேலும் இப்போதும் பாய்ந்து வருவார்கள் என்று தெரியும். இருந்தாலும் சொல்ல வேண்டியது கடமையல்லவா ???
பெரியாரியத்தை முடிக்க வெளியிலிருந்து யாரும் வரவேண்டாம், அவர்களே முடித்துக் கொள்வார்கள். பெரியாரைப் பற்றி யாரும் எனக்கு வகுப்பெடுக்க வேண்டாம்.என தெரிவித்திருந்தார் கவிஞர் தாமரை, இதற்கு வலைதளவாசி ஒருவர் நீங்கள் பெரியார் அளவு புகழ் பெறுவீர்கள் என்றால் நீங்களும் இதிலிருந்து தப்ப இயலாது கவிஞர்…. உங்களுக்கும் கட் அவுட் பாலபிஷேகம் எல்லாம் இருக்கும்…. எந்த நல்லவனும் சமூக சீர்திருத்தவாதியும் ஞானியரும் கூட எதிரிகளை கூட வென்று விட முடியும்….
ஆனால் அவர்களை பின்பற்றுகின்றவர்கள் என சொல்லி கொள்பவர்கள் அடிக்கும் கூத்திலிருந்து தப்புவது கடினம். என வலைதளவாசி ஒருவர் தெரிவித்த கருத்துக்கு அடிப்படைக்கே அல்லவா உலை வைக்கிறார்கள் என பதிலளித்துள்ளார் தாமரை, இந்நிலையில் திராவிட கழகம் பற்றி கடுமையாக விமர்சனம் செய்துள்ள தாமரைக்கு தக்க பதிலடி கொடுத்து விளக்கம் கொடுப்பாரா திராவிட கழக தலைவர் கி.வீரமணி என கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.