இன்று முதல் படப்பிடிப்புக்கான அனுமதியை வாபஸ் பெற்ற பெப்சி…

0
Follow on Google News

கொரோனா 2வது அலை வீரியத்துடன் வேகமாக பரவுவதால் மே31 வரை படப்பிடிப்பை ரத்து செய்து கொள்வதாக பெப்சி நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டது. பிறகு கொரோனா ஒரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அப்போது சினிமா படப்பிடிப்பு தடையால் பொருளாதாரத்தில் பலர் பாதிப்பு அடைந்தனர். தமிழக அரசிடம் பெப்சி நிறுவனம் கேட்டு கொண்டதின் அடிப்படையில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது புதிய முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் மே14 முதல் மே24 தமிழகம் முழுவதும் ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்தார். அரசு கொடுத்த அனுமதியால் சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர்களை விட்டு வைக்கவில்லை. தமிழகத்தில் சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் கொரோனா பாதித்து தொடர்ந்து உயிரிழந்து வருவது திரைத்துறையே அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

ஊரடங்கில் சினிமா படப்பிடிப்புக்கு வாங்கிய அனுமதியை கொரோனா 2வது அலை தமிழகத்தில் மிக பெரிய அளவில் பாதிப்பை சினிமா துறையிலும் ஏற்படுத்தி உள்ளதால் இதனால் சினிமா துறையை சேர்ந்த பெப்சி நிறுவன தலைவர் ஆர்.கே.செல்வமணி அந்த அனுமதியை இன்று முதல் மே31 வரை வாபஸ் பெறுவதாக தமிழக அரசிடம் அறிவித்தார். இதை தொடர்ந்து சினிமா தயாரிப்பாளர்களும் படப்பிடிப்பு ரத்து என்று அறிவித்தனர். இதனால் தமிழக திரைப்பட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பை சந்திக்க கூடும் என்பதால் அவர்களை பாதுகாப்பதில் முக்கிய ஆலேசணை நடத்தி வருவதாக கூறினார்.