தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி கட்ட பிரச்சாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, பெரும்பாலான தொகுதிகள் கடும் இழுபறியில் இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இறுதி அஸ்திரமான ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்யயும் பணியில் இறங்கியுள்ளனர், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே அந்ததந்த பகுதியை சேர்த்த கட்சி நிர்வாகிகளிடம் பணம் ஒப்படைக்கப்பட்டு பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிமுக செல்வாக்கு மிக்க தொகுதியான திருப்பரங்குன்றம் தொகுதியில், அதிமுக கிளை செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் செயல்களால் இரட்டை இலை சின்னத்துக்கு எதிராக மக்களை திசை திருப்பி கொண்டிருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது, 200 ரூபாய் தருவதாக பிரச்சாரத்துக்கு அழைப்பது பின் பிரச்சாரம் முடித்ததும் 50 ரூபாயை அதிமுக நிர்வாகிகள் கொடுத்து அனுப்பி வைப்பது, பெண்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது.
இந்த தொகுதி திமுக கூட்டணி கட்சியான கமியூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதும், அதிமுக வெற்றி உறுதி என கூறப்பட்டது, களம் நிலவரமும் அப்படி தான் இருந்தது, ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரம், அதிமுகவினர் கம்யூனிஸ்ட் கட்சி தானே என்கிற மெத்தன போக்கு தற்போது அந்த தொகுதியில் கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளது, இதனால் தற்போது வெற்றிக்காக தனது முழு பலத்தையும் இறக்கியுள்ளது அதிமுக.
நகரங்களில் அதிமுகவுக்கு பின்னடைவு என கருத்து கணிப்பு தெரிவித்தாலும், பெரும்பாலும் கிராமங்களை உள்ளடக்கிய திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் செல்வாக்கு கிராமங்களில் வலுவாக உள்ளது, ஆனால் அந்தந்த கிராமங்களில் உள்ள கட்சி நிர்வாகிகள் பண பட்டுவாடா செய்வதில் ஓரம் வஞ்சம் செய்வதால் கம்யூனிஸ்ட் கட்சி வேட்ப்பாளர்களுக்கு இவர்களே வாக்குகளை மடை மாற்றி விடுவார்கள் போல் உள்ளது என்கின்றனர் அதிமுக விசுவாசி ஒருவர்.
இது குறித்து அந்த தொகுதியை சேர்ந்த ஒருவர் நம்மிடம் கூறுகையில், கட்சி வேறுபாடுயின்றி அனைவருக்கும் பணம் பட்டுவாடா செய்ய அந்தந்த பகுதி நிர்வாகிகள் நியமிக்க பட்டுள்ளனர், ஆனால் நிர்வாகிகள் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பணத்தை பட்டுவாடா செய்துவிட்டு மீதத்தை சுருட்டி கொள்கிறார்கள்,இதனால் பணத்தை எதிர்பார்த்து அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற மனநிலையில் உள்ளவர்களை கூட எதிர்கட்சிக்கு வாக்களிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என வருத்ததுடன் தெரிவித்தார்.