எழுத்தாளர் இமையம் எழுதிய வாழ்க, வாழ்க என்கிற நாவல் குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், அம்மையார் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பிரச்சாரம் செய்த தேர்தல்களம். காசுகொடுத்து மதிய நேர கூட்டங்களுக்கு காலையிலேயே ஆட்களை கூட்டுவது அடிமைகளின் வழக்கம். அப்படி நடந்த பல கூட்டங்களில் வெயில் தாங்காமல் பலர் சுருண்டுவிழுந்து இறந்தனர். அத்துயர நிகழ்வுகளை நினைவுபடுத்தும் நாவலே ‘வாழ்க வாழ்க’.
தலைவியிடம் நற்பெயர் பெற அடிமைகளின் ஏற்பாட்டால் கூடிய அப்பாவி ஏழை – எளிய மக்களைப் பிணமாகத் தூக்கிச்செல்ல வைத்த கொடுமையை எழுத்தாளர் இமையம் அவர்களின் வார்த்தைகளில் படிக்கையில் அந்த உச்சி வெயிலின் வெப்பம் நமக்குள் இறங்குவது போன்ற உணர்வு. கால்கள்தான் மாறுகின்றன அடிமைகள் மாறுவதில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவக் கல்வியில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க மேலும் ஒருமாதம் அவகாசம் கேட்டிருந்தார் தமிழக ஆளுநர், இதனையெடுத்து, ஒப்புதல் வழங்க அழுத்தம் தரத் தவறி, ஏழை – எளிய மாணவர்களுக்குத் துரோகம் செய்வதாக அ.தி.மு.க அரசு மீது குற்றம் சுமத்தியுள்ள திமுக.
அக்-24-இல் ஆளுநர் மாளிகை முன் காலை 10 மணி அளவில் தி.மு.கழகம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது.இதற்கு உதயநிதி, அரசுப்பள்ளி மாணவர் மருத்துவம் படிக்க 7.5% இட ஒதுக்கீட்டுக்கான சட்ட முன்வடிவை ஆளுநர் ஏற்க மறுக்கிறார். அடிமைகளும் அதை கைகழுவுகின்றனர். சட்ட முன்வடிவை ஏற்கக்கோரி தலைவர் ஸ்டாலின் அவர்கள் போராட்டம் அறிவித்துள்ளார். நடைபெறும் இப்போராட்டத்தை இளைஞரணியினர் பங்கேற்று வெல்லச்செய்வோம் என தெரிவித்துள்ளார்.