தோல்விக்கு எடப்பாடி மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்.! பொங்கி எழுந்த ஓபிஎஸ்.!

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் யார் வெற்றி பெறப்போவது என கடும் குழப்பம் நீடித்து வருகிறது, இதில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என நம்பிக்கையில் அமைச்சர் பட்டியல் தயாரித்து முடித்துவிட்டு தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறார் திமுக தலைவர் முக ஸ்டாலின், இதே போன்றும் மீண்டும் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக முக்கிய நிர்வாகிகளிடம் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து தனது நெருக்கமான கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் நிலவரம் குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஒ.பன்னீர் செல்வம் என தகவல் வெளியாகி உள்ளது, என்னை கேட்காமல் எடப்பாடி விருப்பம் போல் அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரிவித்தவர், கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் வெற்றி பெற்றால் பொதும், குறிப்பாக அவர் எடுத்த ஓவொரு முடிவும் தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வன்னியர் இட ஒதுக்கீடு, தேமுதிக கூட்டணியில் இருந்து வெளியேறியது, அமமுக வை இணைக்க மறுத்தது என தன்னிச்சையாக எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முடிவுகள் தென் மாவட்டத்தில் அதிமுக பின்னடைவுக்கு காரணமாக அமைய காரணமாகும், இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தால் எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் பொறுப்பேற்க்க வேண்டும் என தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஓபிஎஸ் என கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அதிமுகவில் யார் எதிர்க்கட்சி தலைவர் என்கிற மறைமுக போட்டி தொடங்கியுள்ளது, சட்டமன்ற உறுப்பினராக யாருடைய ஆதரவாளர்கள் அதிகமாக இருகிறார்கள் அவர்களுக்கு தான் எதிர்க்கட்சி தலைவர் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்க படுகிறது, அதனால் எடப்பாடி ஆதரவாளர்கள் அதிகம் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதால் ஓபிஎஸ் – எடப்பாடி இடையே மோதல் உச்சக்கட்டம் அடையும் என தெரிகிறது.

முடிவில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றும் சூழல் ஏற்பட்டால், தற்போது உள்ள அதிமுக இரட்டை தலைமையை ஒரு தலைமையாக மாற்றி தன்னை முன்னிறுத்தி கொள்ள ஓபிஎஸ் முடிவில் இருந்து வருவதாக கூறப்படுகிறது, ஆனால் அதிமுக முக்கிய தலைவர்கள் சிலர் அதற்கெல்லாம் வாய்ப்புகள் கிடையாது, அதிமுக வெற்றி பெற்று தற்போது உள்ளது போன்று ஆட்சியும் கட்சியும் வழிநடத்தப்படும் என நம்மிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.