நீட் தேர்வை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை படைத்து வருகின்றனர், இந்த வருடம் நடந்த நீட் தேர்வில், திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவிலைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 720க்கு 710 மதிப்பெண் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.நாமக்கல் தனியார் பயிற்சி மையத்தில் படித்த இவர் இந்திய அளவில் 8வது இடத்திலும் ஓ.பி.சி பிரிவில் இந்திய அளவில் முதலிடமும் பிடித்துள்ளார்.நாமக்கல் மாணவி மோகன பிரபா 705 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடமும், தேசிய அளவில் 52வது இடமும் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 48.57 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 57.44 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.தமிழகத்தில் நீட் தேர்வுக்கு 1.21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். 99,610 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 48.57% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 8.87 சதவீதம் அதிகரித்து 57.44 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தற்போது வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது, நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் பேசும் அந்த விடியோவில் மாணவி ஒருவர் பனிரெண்டாம் வகுப்பில் 1120 மதிப்பெண் பெற்றுள்ளார், அவர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் அவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை, அவர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது, அதற்க்கு அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஒருவர், அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க போதிய மதிப்பெண் அந்த மாணவியிடம் இல்லை என கூறுகிறார்.
அதற்கு கோபிநாத் ஆவேசமாக எவ்வளவு மதிப்பெண் தான் வேண்டும் மருத்துவ படிக்க என கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது, இந்த வீடியோவை பார்க்கு வலைதளவாசிகள் தமிழ்நாட்ல எத்தனை ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுகின்றனர்,அவர்கள் அனைவர்க்கும் மருத்துவ சீட் குடுக்க தமிழ்நாட்டில் இடம் கிடையாது, அந்த பொண்ணு Categoryக்கு எவ்ளோ மார்க் எடுக்கனுமோ அவ்ளோ மார்க் எடுத்தா தான் சீட் தருவாங்க, +2 பாஸ் பண்ணாலே மெடிக்கல் சீட் கிடையாது, கட் ஆப் வேண்டும் மரமண்டை கோபிநாத் என வலைதளவாசிகள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.