ஒரு புறம் தடுப்பு ஊசிகளுக்கு எதிராக வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பல கோணங்களில் நம்பிக்கையின்மையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது, மறுபுறம் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. அரசுக்கு இப் பேரிடரை கையாளத் தெரியவில்லை என்கிற குற்றசாட்டு எழுந்து வருகிறது.
கொரோனா தொற்று குறித்து பரபரப்பான அரசியல் தொடர்ந்து கொண்டிருக்க, இதில் ஒன்றுமறியா சாமானிய பொதுமக்களைத் தான் அதிகமாக பாதிக்கிறது. இதற்கான தீர்வுகளை பிரபல சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார் அதில், உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நாட்டு மக்களும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து …இங்குள்ள கீழான அரசியலுக்கு காதைக் கொடுக்காமல், மக்கள் அனைவரும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது நலம்.
இதனை சொல்கிற நான் தடுப்பூசி போட்டுக் கொண்டுவிட்டேனா ? என்கிற கேள்வி எழுமானால்… குடும்பத்தில் திருமண நிகழ்வுகள் / கூடுகைகள் இருந்ததால்…அதனை மருத்துவரிடம் எடுத்துக் கூறி…நான் தடுப்பூசி போட்டுக் கொண்டுவிட்டேன். காய்ச்சல், தலைவலி போன்ற எந்தவொரு பக்க விளைவும் எனக்கு ஏற்படவில்லை தெரிவித்து, இரண்டாம் தவணை அடுத்த வாரத்தில் போட வேண்டும்.
இப் பேரிடர் காலத்தில்… தடுப்பூசிகள் மீது அறிவியல் அடிப்படைகள் இன்றி நம்பிக்கையின்மை ஏற்படுத்துவோர்கள் மீதும், தொற்று பரவல் குறித்து பீதியை உருவாக்குபவர்கள் மீதும்…பொதுமக்கள் நலன் கருதி ..அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒற்றுமை , ஒத்துழைப்பு, பரஸ்பர உதவிகள் என்று இப் பேரிடரை அன்பும், அக்கறையும் கொண்ட மனிதர்களாக கடக்கும் வகை செய்வோம் என சமூக அரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.