நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது, இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் யார், என்பதில் அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது, எதிர்கட்சி தலைவர் யார் என தேர்தெடுப்பதற்காக நேற்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டம் முடிவில் எதிர்க்கட்சி தலைவர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் இறுதியில் திங்கட்கிழமை மீண்டும் இந்த கூட்டம் நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரை தேர்தெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் நடந்து என்ன என்பது பற்றி விசாரணை செய்ததில், கொங்கு மண்டலத்தில் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் கொங்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சி தலைவராக தேர்தெடுக்க வேண்டும் என எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ கள் முன் மொழிந்துள்ளனர்.
இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு தான் என்றும், வன்னியர் இட ஒதுக்கீட்டு காரணமாக தென்மாவட்டத்தில் அதிமுக அதிக இடங்களில் தோல்வியை தழுவியது என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குற்றசாட்டுகளை அடுக்கி கொண்டே சென்றுள்ளார், இவரை தொடர்ந்து தென்மாவட்டத்தை சேர்ந்த கடம்பூர் ராஜு இன்னும் சிலர் ஓபிஎஸ் க்கு ஆதரவாகவும் எடப்பாடிக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து வாக்குவாதம் எல்லை மீறியதை தொடர்ந்து கூட்டம் திங்கள் கிழமை ஒத்திவைக்கப் படுவதாக இரண்டு தரப்பில் இருந்து முடிவு செய்யபபட்டு கலைந்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஆட்சியில் இருந்த போது எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் ஒவொரு முடிவுக்கு விட்டு கொடுத்து சென்ற ஓபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர் விவகாரத்தில் விட்டுக்கொடுப்பதில்லை என்று உறுதியாக இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்த பின்பு அதிமுகவில் இணைப்பது குறித்து அமித்ஷா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், ஓபிஎஸ் சம்மதம் தெரிவித்தார், ஆனால் எடப்பாடி இதற்கு ஒப்பு கொள்ளவில்லை, இதனால் சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார், இந்நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த சசிகலா உதவியை ஓபிஎஸ் அணுக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து திங்கள் கிழமை ஓபிஎஸ் எதிர்கட்சி தலைவராக எடப்பாடி எதிர்ப்பு தெரிவித்தால் மீண்டும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்கிற அடிப்படையில் சசிகலாவை மீண்டும் அதிமுகவுக்குள் கொண்டு வந்து எடப்பாடிக்கு எதிராக சசிகலாவுடன் கைகோர்த்து செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்த பின்பில் இருந்து தற்போது வரை ஓபிஎஸ் தொடர்ந்து சசிகலாவுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.