அதிமுக கூட்டணியில் தேர்தல் ஒப்பந்தத்தில் இன்றுக்குள் கையெழுத்திட வேண்டும், அடுத்த கட்ட பேச்சுவதையெல்லாம் கிடையாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து எச்சரிக்கும் விதத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகிய இருவருக்கும் தகவல் சென்றுள்ளது, அதிமுக கூட்டணியில், பாமக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு முடித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆனால் அதிமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் நீடித்து வருகிறது, தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான அடுத்த நாள் பாமகவுக்கு 23 தொகுதிகள் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திட பட்டது, தற்போது பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் தேமுதிக உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பாமகவை விட அதிகமான தொகுதியும், ஒரு ராஜசபா சீட்டும் தேமுதிக தரப்பில் இருந்து கேட்கப்பட்டது.
ஆனால் அதிமுக தரப்பில் இருந்து மிக குறைந்த அளவு தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என பிடிவாதமாக இருந்துள்ளனர், இதனிடையே ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், எங்கள் தயவு இல்லாமல் 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைத்திருக்க முடியாது என்றும், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, தேமுதிக தனித்து போட்டியிட்டால் கூட அதிக வாக்குகளை பெற முடியும் என மறைமுகமாக அதிமுகவுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்நிலையில் அடுத்ததடுத்து நடந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தேமுதிக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது, அதிமுக தரப்பில் இருந்து தங்கமணி , வேலுமணி போன்ற அமைச்சர்கள் கலந்து கொண்டனர், தேமுதிக தரப்பில் இருந்து முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர், பேச்சுவார்த்தை இறுதியில் 12 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக முன்வந்தது.
இதற்கு பிரேமலதாவிடம் கேட்டு தகவல் சொல்வதாக தெரிவித்த தேமுதிக நிர்வாகிகள், பின்பு பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோரிடம் ஆலோசனை நடத்திவிட்டு பாமகவுக்கு வழங்கியது போன்று 23 தொகுதிகள் வரை வழங்க வேண்டும் என பிரேமலதா கேட்டுக்கொண்டதாக அதிமுக பேச்சுவார்த்தை குழுவிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளனர், இதற்கு முதல்வரிடம் கேட்டு பதிலதிப்பதாக தெரிவித்த அதிமுக குழுவினர், முதல்வரிடம் பேசிவிட்டு தேமுதிக பேச்சுவார்த்தை குழுவில் இடப்பெற்ற நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
அதில், இறுதியாக 12 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கமுடியும், கூடுதலாக ஒரு ராஜசபா உறுப்பினர் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி தெரிவித்ததாகவும், இன்று (7-3-2020) மாலைக்குள் இந்த ஒப்பந்தந்தில் கையெழுத்திட வேண்டும் என முதல்வர் கேடு விதித்தாக தெரிவித்தவர்கள், இது தான் இறுதிமுடிவு இதற்கு பிறகு இனிமேல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என முதல்வர் தெரிவித்து விட்டதாக அதிமுக பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றவர்கள் தேமுதிகவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர், இந்நிலையில் இன்று மாலைக்குள் தேமுதிக தேர்தல் ஒப்பந்தத்தை ஏற்று கொண்டு கையெழுத்திடம் என எதிர்பார்க்க படுகிறது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .