வரும் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. அதிமுக ,திமுக போட்டியிடும் சில தொகுதிகளில் ஒரு சில தொகுதிகள் இந்த கட்சி தான் உறுதியாக வெற்றி பெரும் என நமது தினசேவல் நடத்திய சர்வே ரிப்போர்ட் உறுதி படுத்துகிறது, அந்த வரிசையில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில் நடத்தப்பட்ட சர்வே பணியில், வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளாக 11 தொகுதிகள், 5 தொகுதிகள் கடும் போட்டி, மீதம் உள்ள 4 தொகுதி இழுபறியில் உள்ளதாக சர்வே ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.
இதில் வெற்றி வாய்ப்புள்ள 11 தொகுதிகளில் மூன்று தொகுதிகள் பாஜக வெற்றியை யாராலும் தட்டி பறிக்க முடியாது என சர்வே ரிப்போர்ட் உறுதியாக தெரிவித்துள்ளது, அதில் நாகர்கோவில் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் MR.காந்தி வெற்றி பெறுவது சர்வே ரிப்போர்ட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016 சட்டசபை தேர்தலின் போது இதே தொகுதியில் போட்டியிட்ட MR காந்தி, 46,413 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தவர்.
இவருக்கு அடுத்து மூன்றாவது இடத்தை பிடித்த அதிமுக வேட்பாளர் 45,824 வாக்குங்கள் பெற்றிருந்தார், திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 67,369 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிந்தார், இந்நிலையில் இம்முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுவதால், மேலும் அந்த தொகுதி மக்கள் மத்தியில் MR காந்தி அவர்களுக்கு நற்பெயர் இருந்துவருவது நாகர்கோவில் சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் MR காந்தி வெற்றியை உறுதி செய்துள்ளது சர்வே ரிப்போர்ட்.
அதே போன்று தாராபுரத்தில் போட்டியிடும் தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பாண்டுரங்கன் ஆகியோர் வெற்றியும் உறுதி செய்துள்ளதாக சர்வே ரிப்போர்ட் தெரிவித்துள்ளது, மற்ற பாஜக வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் நிலவரம் என்ன என்பது பற்றி அடுத்தடுத்து நமது தினசேவல் நடத்திய சர்வே ரிப்போர்ட் தீவிர ஆய்வுக்கு பின் வெளியிடப்படும் என தெரிவித்து கொள்கிறோம்.