இனி செய்தி வாசிக்கப்போவது கிடையாது.! கண்ணீருடன் கலைஞர் டிவியில் இருந்து வெளியேறிய பனிமலர்.! என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

கலைஞர் செய்திகளில் இருந்து வெளியேற்றியது பற்றி செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது, 2021 இல் நான் எடுத்த மிக முக்கிய முடிவு கலைஞர் செய்திகளில் பணியிலிருந்து விலகியது. ஒரு நடுத்தர, மாத சம்பளத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கும் ஒருவளுக்கு அது ஆகப் பெரும் முடிவு. அடுத்த மாதம் ஐந்தாம் தேதி ஆனால் சம்பளம் வராது என முடிவுசெய்து வேலையை விடப்போகிறேன் என முதன்முதலாக திவ்யாவிடம் சொன்னபோதே கண்களில் மளமளவென கண்ணீர் கொட்டியது.

அதுவும் என்னுடைய மற்ற வேலைகளின் மூலம் என் சம்பளத்தைவிட அதிகமாக எனக்கு வருமானம் வந்தும்கூட. ஏனென்றால் கலைஞர் செய்திகளில் சேரும்போதே இதுதான் ஒரு முழு நேரப் பணியாளராக என்னுடைய கடைசி நிறுவனம் என முடிவெடுத்தே பணியில் இணைந்தேன். எவ்வளவு நாட்கள் இருக்க வேண்டும் என்ற திட்டமிடல் இருக்கவில்லை ஆனால் அதிக நாட்கள் இருக்கக் கூடாது என முடிவெடுத்திருந்தேன்.

ஆரம்பத்தில் அடுத்து என்ன என்பது பற்றி எல்லாம் எந்த யோசனையும் இல்லாமல் கம்ஃபர்டபுளாக இருந்தேன். கொரோனாதான் என் வாழ்க்கையை மாற்றியது. இந்த கால கட்டத்தில் எந்த வேலையும் குறைவானது இல்லை என்ற எண்ணத்துடன் வந்த வேலைகள் எல்லாம் செய்வது, புதிதாக முயற்சிகள் எடுப்பது என அத்தனையும் கடந்த ஒன்றரை வருடத்தில் செய்தேன். எப்பொழுதும் முயற்சியும் கடின உழைப்பும் தோற்பதில்லை.

அதற்கான பலனை பெற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால் வேலையைவிட வேண்டுமானால் சரியான திட்டமிடல் வேண்டும். அதற்கு உறுதியான வருமானம் வேண்டும். டிசம்பர் 31 ஒரு நிறுவனத்தின் பணியாளராக என்னுடைய கடைசி நாளாக இருக்க வேண்டும் என இந்த ஆண்டில் இடையிலேயே முடிவெடுத்திருந்தேன். அதற்கு பொருளாதார ரீதியாக சில இலக்குகளை நிர்ணயித்திருந்தேன்.

அதற்கான ஏற்பாடுகளை ஆண்டின் இரண்டாம் பாகத்தில் செய்ய ஆரம்பித்துவிட்டேன். அதிக சேமிப்பு, முதலீடு, அநாவிசய செலவைக் குறைப்பது, தேவையில்லாத பொருட்களை வாங்காமல் இருப்பது என ஒரு தவம்போல் தயாரானேன். அதனால் முன்னதாக அக்டோபரிலேயே நான் நினைத்த இலக்கை அடைந்துவிட்டேன். வேலையில் இருந்து கொண்டே சொந்த தொழில் செய் அதுதான் நல்லது என பலரும் சொன்னார்கள்.

ஒரு Brandடோடு இருப்பது நல்லது என்றார்கள். உண்மையில் அவர்கள் சொல்லும்போதெல்லாம் நான் அந்த மனநிலை எல்லாம் கடந்து நாட்கள் ஆகியிருந்தது. 8 மணி நேரம் அலுவலகப் பணி என்பது அதோடு முடிவதில்லை. நம் பயண நேரம், தயாராவது என எல்லாம் சேர்த்து 12 மணி நேரத்தை விழுங்கும். அதற்குப் பிறகு மணப் பெண் அலங்காரம், லைவ் ப்ரமோசன் என்பதெல்லாம் மிகக் கடினமாக இருந்தது.

சரியான சாப்பாடு இல்லை, உறக்கமில்லை, வீட்டில் இருக்கவே முடியவில்லை. நாம் விடுப்பு எடுப்பதோ, ஷிஃப்ட் மாற்றுவதோ உடன் பணிபுரிபவர்களுக்கு தொல்லையாக இருந்துவிடக்கூடாது. அந்த நிலை வருவதற்கு முன்பே இந்த முடிவை நான் எடுத்துவிட்டேன். மிகச் சில நாட்கள் கால அளவில் என்னை பணியிலிருந்து விடுவிக்குமாறு எங்கள் செய்தி ஆசிரியர் திருமா சாரிடம் கேட்டுக் கொண்டேன். ஏனெனில் தீபாவளியை ஒட்டி எனக்கு வேலைகள் வரிசைகட்டி நின்றன.

இந்த சம்பளத்தை சமாளித்துவிடுவீர்களா? அவசரப்படாதீர்கள் என ஒரு தகப்பனைப் போல அறிவுரை சொன்னார், நான் தயாராக இருக்கிறேன் என உறுதியோடு சொன்னேன், விடுவித்துவிட்டார். 12 வருடம் செய்திவாசிப்பாளராக இருந்த என்னுடைய கடைசி பணி நாள் அக்டோபர் 10. இனி எந்த நிறுவனத்திலும் செய்தி வாசிப்பாளராகவோ, எந்த நிறுவத்தின் முழு நேர ஊழியராகவோ பணியாற்றப் போவதில்லை. இனி நாம்தான் Brand, பனிமலர் பன்னீர் செல்வம்தான் நிறுவனமே, இது திமிர் இல்லை, தன்னம்பிக்கை. பனிமலர் பன்னீர்செல்வம்.