திமுக கட்சி கூட்டங்களுக்கு தடையில்லை.! பாஜக சார்பில் தேவர் ஜெயந்திக்கு பால் குடம் எடுக்க தடையா.?

0
Follow on Google News

கொரோன ஊரடங்கு உத்தரவு காலத்தில் தமிழக முழுவதும் மக்களை கூட்டமாக ஓன்று கூட வைத்து திமுக நடத்தும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்து வரும் காவல் துறை, சென்னையில் பாஜக சார்பில் நடைபெற இருக்கும் தேவர் ஜெயந்திக்கு பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துள்ளது, காவல் துறை ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறதா என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது,

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 113வது ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதை யொட்டி, தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தி விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது, அந்த வகையில் தமிழக பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல்குமார் ஏற்பாட்டில் இன்று காலை 9மணிக்கு சுமார் 150 பெண்கள் பால் குடம் சுமந்து வேளச்சேரி கங்கை அம்மன் கோயில் முதல் நந்தனம் தேவர் சிலை வரை ஊர்வலமும், மதியம் 12மணிக்கு 1000 பேருக்கு பாஜக தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பாக அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல் துறையினரிடம் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவை மேற்கோள் காட்டி பால் குடம் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, நேற்று இரவு 11 மணியளவில் நிர்மல் குமார் இல்லத்திற்கு சென்ற காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்ட கடிதத்தை கொடுத்து சென்றுள்ளனர், இதுகுறித்து நிர்மல்குமார் கூறுகையில்,

ஆன்மீக செம்மல் அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி விழாவிற்கு பால்குடம் எடுத்து சென்று அபிஷேகம் செய்வது பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படும் வழக்கம் அதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது கண்டிக்கத்தக்கது. சமூக இடைவெளியுடன் அனுமதி வழங்க வேண்டும் என கேட்டு கொண்டார், மேலும் பால்குடம் எடுத்து ஆன்மீகச் செம்மல் தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவை கொண்டாடுவது வழக்கம்..ஓட்டுக்காக செல்லும் ஸ்டாலினுக்கு அனுமதி உண்டு.. பாஜகவினருக்கு அனுமதி இல்லையா ?

நாம் திட்டமிட்டபடி தொடர்ந்து பயணிப்போம் என நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்,இதனை தொடர்ந்து திட்டமிட்டபடி இன்று காலை சுமார் 150 பெண்கள் பால் குடம் சுமந்து வேளச்சேரி கங்கை அம்மன் கோயில் முதல் நந்தனம் தேவர் சிலை வரை நிர்மல்குமார் தலைமையில் ஊர்வலமாக செல்வார்கள் என எதிர்பார்க்க படுகிறது.