கைது செய்யப்போவதாக எம்பி செந்திகுமார் மிரட்டல்.. ஒரு எம்பி என்கிற பயமில்லாமல் கலாய்த்து விளையாடும் நெட்டிசன்கள்..

0
Follow on Google News

சமூக வலைதள பிரபலம் கிஷோர் கே சாமி நேற்று கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார், இவரது கைதை சிலர் வரவேற்று வரும் நிலையில், இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர், பிரபல எழுத்தாளர் மரித்தாஸ் இது குறித்து தனது சமூக வலைதளப்பாக்கத்தில். திமுக நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா!

ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை! ஆக வழக்கமான அடக்குமுறை அரசியலில் திமுக ஸ்டாலின் அவர்கள் இறங்கியுள்ளார். சட்டத்தை தன் பழிவாங்கும் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியை கலைப்பது தான் சரி.என தெரிவித்துள்ளார்.இதற்கு தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார், நிறைய வேலை இருக்கு, அவங்க வரும்வரை நேரத்தை பயன் உள்ளதாக செலவழிக்கவும் என்றும்.

மேலும் பின் குறிப்பு என குறிப்பிட்டு, உள்ளே போகும் போது மறக்காம board எடுத்துட்டு போகவும் என எழுத்தாளர் மரித்தாஸை மிரட்டும் போக்கில் பதிவு செய்திருந்தார். இதற்கு வலைதள வாசி ஒருவர், முட்ட போண்டா ஆட்சிக்கு வந்துவுடன் ஏதாவது நம்பி வாக்கு அளித்த மக்களுக்கு நல்லது செய்யாமல் கட்சிகளை விமர்சனம் செய்தவர்களை கைது செய்ய வெட்கமா இல்லை ஒருவர் போனால் ஆயிரம் விதை முளைக்கும் என கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள செந்தில்குமார் எம்பி ஆயிரம் பேருக்கும் உள்ளே சிறப்பான சலுகை உடன் இட வசதி உண்டு மிரட்டல் விடுத்திருந்தார், இந்நிலையில் செந்தில் குமார் எம்பியின் இந்த மிரட்டலுக்கு நெட்டிசன்கள் பயப்படுவது போன்று இல்லை, மாறாக அவரை கிண்டல் கேலி செய்து கலாய்த்து விளையாடி வருகின்றனர், அதில், ஐயய்யோ பயந்து பயந்து வருது என்றும், முட்ட போண்டா சார்..இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் நிறைய பார்த்துட்டோம்..

மேலும், மாரிதாஸ் twit செய்து 5 நிமிடங்களில் பதில் பதிவு செய்யும் உங்களுக்கு வேலை ஒன்றும் இல்லை எனில் தேர்வு செய்த மக்களுக்கு எதாவது உருப்படியாக உதவி செய்யவும். அல்லது உடற்பயிற்சி செய்து தொப்பையை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் என கிண்டல் செய்தும், கொரானா காலத்தில் ஒரு எம்பி தனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு அத்தியாவசியமாக செய்ய வேண்டிய வேலைகளை விட்டு மற்ற அனைத்து வேலைகளையும் செய்யும் காலக் கொடுமை தமிழக மக்கள் தலையெழுத்து என அறிவுரை வழங்கியும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.