கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியை தவிர்த்து, தமிழகம் மற்றும் புதுசேரியில் மீதம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றது திமுக கூட்டணி, இந்த தேர்தலில் திமுக வெற்றிக்கு காரணம் பாஜக எதிர்ப்பு, பிரதமர் மோடி எதிர்ப்பு என தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய ஒரு பிம்பம் தான் என கூறப்பட்டது, திமுக தனக்கென ஒரு ஆதரவு அலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தாமல், பாஜக எதிர்ப்பு,மோடி எதிர்ப்பு என ஒரு பிம்பத்தை உருவாக்கி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை அறுவடை செய்தது திமுக.
இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, வரும் 2021 சட்டசபை தேர்தலின் திமுக தேர்தல் வியூகங்களை அமைக்க பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபெக் நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்த பிறகு தான் திமுக மிக பெரிய சரிவை நோக்கி சென்றுள்ளது. இதனை தொடர்ந்து ஐபெக் நிறுவனம் பாஜக ஸ்லீப்பர் செல் என்கிற விமர்சனம் எழுந்து வந்த நிலையில், அதை உறுதி படுத்தும் விதத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு சில அதிர்ச்சி ரிப்போர்ட் சென்றுள்ளது.
ஐ-பேக் நிறுவனம் திமுகவுடன் ஒப்பந்தம் செய்யப்படும் வரை பாஜக எதிர்ப்பு மற்றும் பிரதமர் மோடி எதிர்ப்பு என அரசியலை தீவிரமாக செய்துவந்த திமுக, ஐ -பேக் நிறுவனம் வருகைக்கு பின்பு திமுகவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அலையை உருவாக்கவும், திமுக தலைவர் முக ஸ்டாலினை மக்கள் மத்தியில் மிக பெரிய தலைவராக ஒரு மாயை ஏற்படுத்தும் செயலில் இறங்கியது ஐ-பேக் நிறுவனம், அதற்காக சில வியூகங்களை வகுத்து கொடுத்தது பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ-பேக் நிறுவன ஊழியர்கள்.
ஆனால் அவர்கள் வகுத்து கொடுத்த வியூகங்கள் அணைத்து மக்கள் மத்தியில் எடுபடவில்லை மாறாக அது, திமுக மற்றும் அதன் கட்சி தலைவர் ஸ்டாலினை கேலி, கிண்டலுக்கு ஆளாக்கியுள்ளது.மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு பாஜக எதிர்ப்பு, பிரதமர் மோடி எதிர்ப்பு என திமுக கட்டிவைத்திருந்த பிம்பம் பாஜக ஆதரவு, மற்றும் பிரதமர் மோடி ஆதரவு என மாற்றம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வாக்கு சதவீதத்தில், திமுக வீழ்ச்சி மற்றும் பாஜக, அதிமுக வளச்சிக்கு பின்னனியில் ஐ-பேக் நிறுவன ஊழியர்கள் ஒரு காரணமாக இருந்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது, ஐ-பேக் நிறுவனம் திமுக உடன் ஒப்பந்தம் செய்த பின், அந்த நிறுவனத்தில் வேலை செய்ய தமிழகத்தில் இருந்து ஆட்கள் எடுக்கப்பட்டது, அதில் பெரும்பாலானவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது, வரும் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைய செய்ய பாஜகவை சேர்த்த பலர் திட்டமிட்டே ஐ-பேக் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது.
இதன் பின்பு, தமிழகம் முழுவதும் நடந்த பலவேறு ஆய்வு பணிகளில் ஈடுப்பட பாஜகவை சேர்ந்த ஐ-பேக் நிறுவனத்தில் வேலை செய்த ஊழியர்கள், தவறான தகவலை சமர்ப்பித்துள்ளார். இந்த தகவலை வைத்தே பிரசாந்த் கிஷோர் திமுக தலைவருடன் ஆலோசனை நடத்தி அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்துள்ளார். இதில் திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை உருவாக்குவது போன்றும், வலிமையான வேட்பாளரை ஓரம் கட்டிவிட்டு, டம்மி வேட்பாளர் பெயரை முன்னிறுத்தி இவருக்கு தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பது போன்று தவறான தகவல் கொடுக்க பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஐ-பேக் நிறுவனத்தில் பாஜகவினர் ஊடுருவி திமுகவுக்கு எதிராக வேலை செய்துவந்த தகவல் இரு தினகளுக்கு முன் ஸ்டாலினுக்கு நெருங்கிய ஒரு முக்கிய முன்னால் IPS அதிகாரி மூலம் தெரியவந்துள்ளது, இந்த தகவலை கேட்ட ஸ்டாலின் அதிர்ச்சியில் பிரசாந்த் கிஷோர் தெரியாமல் எப்படி, பாஜகவினர் உள்ளே ஊடுருவ முடியும் என சங்கேதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது, மேலும் சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஐ-பேக் நிறுவனத்துடன் நடத்த தேர்தல் குறித்த அடுத்தகட்ட ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்ட போது, பாஜகவினர் பெருபாலானோர் ஐ-பேக் நிறுவனத்தில் இடம் பெற்றிருப்பது பற்றி பேசியுள்ளனர்.
அப்போது ஐ-பேக் தரப்பில் இருந்து சரியான விளக்கம் கொடுக்கவில்லை, இந்நிலையில் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் பாதியிலே ஸ்டாலின் கடுமையாக தனது கோவத்தை வெளிப்படுத்திவிட்டு வெளியே சென்றதாக அண்ணா அறிவாலய வட்டாரம் தெரிவிக்கின்றனர், இதனை தொடர்ந்து பிகாரில் இருந்து வந்த பிரசாந்த் கிஷோரை நம்பி தலைவர் மோசம் போகி விட்டார் என முக ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .