மோடியின் ராஜதந்திரம், மீட்கப்படுகிறது கச்சதீவு.! தேர்தலுக்கு முன்பே அறிவிப்பு வெளியாகிறதா?அதிர்ச்சியில் ஸ்டாலின்.!

0
Follow on Google News

இலங்கையிடம் உள்ள கச்சதீவை மீட்க அணைத்து நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு, 1920 ஆம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது.

கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது. 1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் கச்சத்தீவு கை மாறியது.

28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு.

இது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா; ஸ்வரன்சிங், “1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவர்களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார்.

1976 ஆம் ஆண்டு ஒப்பந்தம் (இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே மீன்பிடி உரிமை பற்றிய கடிதப் போக்குவரத்து நடந்தது. அந்த கடிதங்களே 1976 மார்ச் மாதம் ஒப்பந்தமாக அங்கீகரிக்கப்பட்டது) கச்சத் தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு மக்கள் செல்லகூடாது என்று முற்று புள்ளி வைத்தே விட்டது. இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்திய இலங்கை பயணத்தின் போது கச்சதீவு பிரச்சனைக்கு முடிவு எட்டப்பட்டுள்ளது.

கச்சதீவை மீட்க பல்வேறு ராஜதந்திர நகர்வுகளை செய்து வந்த பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, இரண்டாம் முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றபின்பு , மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பலமுறை இலங்கை பயணம் மேற்கொண்டு கட்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார், இறுதியாக சமீபத்தில் ஜெய்சங்கர் பயணத்தின் போது இலங்கை-இந்தியா இடையே சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது, அதில் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சதீவை மீண்டும் இந்தியா வாசம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒரு மாதங்களுக்கு முன்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ள முழு அனுமதி வழங்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தகவம் வெளியாகி உள்ளது.இந்நிலையில் கச்சதீவு மீட்கப்பட்டால் வரும் தேர்தலில் திமுகவுக்கு மிக பெரிய பின்னடைவு ஏற்படும் என்பதால் ஸ்டாலின் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.