போடி சட்டமன்ற திமுக வேட்பாளராக போட்டியிடுகின்றவர் தங்க தமிழ்செல்வம், இவர் ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர், தேனி மாவட்டத்தில் அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தங்க தமிழ்செல்வன் இருவரின் உட்கட்சி அரசியல் உச்சகட்டமாக இருந்தது, இதில் ஓபிஎஸ் அதிகாரம் மிக்கவராக இருந்ததால் தேனி மாவட்ட அரசியலில் தங்கதமிழ் செல்வனை விட ஓபிஎஸ் கை ஓங்கி இருந்தது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ் எதிராக TTV தினகரன் அணியில் இடப்பெற்ற தங்கத்தமிழ் செல்வன் பின் தினகரன் அதிமுகவில் இருந்து ஒதுக்கப்பட்ட போது தொடர்ந்து தினகரன் உடன் பயணித்தார், பின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்த பின் தினகரன் ஆதரவு எம் எல் ஏ கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர், இதனை தொடர்ந்து தினகரன் தொடங்கிய அமமுக கட்சியில் சார்பில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இதன் பின் தினகரன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வன் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்க பட்டார், இது ஏற்கனவே கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வந்த ஆ.ராசாவுக்கு கோவத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது, இதன் வெளிப்பாடு தான் தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அநாகரிகமாக விமர்சனம் செய்து தங்க தமிழ்ச்செல்வனை தர்ம சங்கடத்துக்கு ஆ.ராசா உள்ளாக்கியதாக கூறபடுகிறது.
இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைத்த பின்பு அவரை முழுவதும் திமுக தலைமை நம்பவில்லை என்றே கூற படுகிறது, மேலும் தொடர்ந்து அவர் தேனி மாவட்டத்தில் திமுக தலைவர் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்வதை விட அதிகம் ஜெயலலிதா பெயரை முன்னிறுத்தியே அரசியல் செய்து வருகிறார், இதனால் அதிமுகவில் இடம் இல்லாததால் வேறு வழியின்றி தான் திமுகவில் பயணிப்பதாக திமுக உணர்கிறது, திமுகவில் இவரை வளர்த்து விட திமுக தலைமை தயாராகவும் இல்லை.
இந்நிலையில் ஆண்டிபட்டி தொகுதியில் தங்கத்தமிழ்செல்வன் போட்டியிட கடந்த ஒரு வருடத்துக்கு மேல் அந்த தொகுதியில் வேலை செய்து வந்த தங்க தமிழ்ச்செல்வனை, போடி தொகுதியில் ஓபிஎஸ் எதிராக போட்டியிட்டு வரை வீழ்த்தினால் உங்களுக்கு அமைச்சர் பதவி என ஆசை வார்த்தைகளை கூறி, மேலும் போடி தொகுதியில் நீங்கள் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி நமக்கு தான் என உசுப்பேத்தி ஓபிஎஸ் க்கு எதிராக களம் இறக்க பட்டவர் தான் தங்க தமிழ்செல்வன் என கூறப்படுகிறது.
ஆனால் தற்போது தங்க தமிழ்செல்வன் தனக்கு நெருக்கமானவர்களிடம் நான் கேட்டது ஆண்டிபட்டி தொகுதி ஆனால், என்னை அரசியலில் இருந்து காலி செய்யவே ஓபிஎஸ் எதிராக நிற்க்க வைத்து திமுக தலைமை எனக்கு எதிராக சதி செய்துவிட்டதாக புலம்பி வரும் தங்க தமிழ்செல்வன், எனக்கும் வேறு வழியில்லை என்பதை உணர்ந்து கட்டாய படுத்தி போடி தொகுதியில் போட்டியிட வைத்துள்ளதாக வருத்ததுடன் தெரிவித்து வருவதாக கூறபடுகிறது.