கமல்ஹாசனிடம் சிக்கிய முக ஸ்டாலின்.! திமுக மீண்டும் ஆட்சியை இழக்க இது தான் காரணமா.?

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 2016 சட்டசபை தேர்தல் போன்றே அமைவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், கடந்த 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக – திமுக இடையே பல தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்பட்டது, இதற்கு முக்கிய காரணமாக மக்கள் நல கூட்டணி தான் என்பது நிரூபித்த தேர்தல் 2016 சட்டசபை தேர்தல்.

மக்கள் நல கூட்டணி பெரும்பாலான திமுக வாக்குகளை பிரித்ததின் விளைவு தான் 2016 தேர்தலில் திமுக தோல்வியை தழுவியது என திமுக மூத்த தலைவர்கள் கூட வெளிப்படையாக பேசினார்கள், அதே போன்று தற்போது நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு செல்ல இருந்த வாக்குகளை பிரித்து , நடிகர் கமல்ஹாசன் திமுக ஆட்சிக்கு வருவதற்கு மிக பெரிய தடையாக அமைந்துள்ளார் என கூறப்படுகிறது.

திமுக பின்பற்றும் பெரியார் கொள்கை, சிறுபான்மை மதத்துக்கு ஆதரவு, இந்து மத எதிர்ப்பு, அவ்வப்போது நாத்திகம் பேசி தன்னை பகுத்தறிவாதியாக அடையாளப்படுத்தி கொண்டு வருகிறார் கமல்ஹாசன், இது திமுகவின் வாக்குகளை தான் குறி வைக்கிறது என கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உணர்த்தியது, இந்நிலையில் திமுக வலுவாக உள்ள பல தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி பிரிக்கும் திமுக வாக்குகள் தான் தற்போது அடுத்தது யார் ஆட்சி அமைக்க இருப்பது என்பதில் இழுபறிக்கு காரணம் என சுட்டி காட்டுகிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

இதை முன்கூட்டியே அறிந்த திமுக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை கூட்டணியில் இணைக்க முயற்சிகள் மேற்கொண்டது, அதர்க்கான பேச்சுவார்த்தையில் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்ட செய்திகள் அப்போது வெளியானது. ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாமல் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இடம் பெறுவதை விரும்பவில்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் அடுத்தது திமுக ஆட்சி தான் என உறுதியாக இருந்த திமுக தலைமை கடந்த ஒரு வரமாக அடக்கி வசிப்பதற்கு காரணம் தேர்தல் முடிவுகள் பற்றிய சில தகவல் சென்றுள்ளது, அதில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவதை உறுதியாக சொல்ல முடியாது, திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் கூட இழுபறியாக உள்ளது, இதற்கு முக்கிய காரணம் திமுக வாக்குங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சென்றுள்ளது தான் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.