உதயநிதிக்கு அமைச்சர் பதவியா.? கனிமொழி வைத்த செக்… தப்பிக்க முடியாமல் சிக்கிய ஸ்டாலின்.!

0
Follow on Google News

2016 சட்டசபை தேர்தலின் போது 18 தொகுதிகளை தன்னுடைய ஆதரவாளர்களுக்கு பெற்று தந்த கனிமொழி, தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சுமார் 30ல் இருந்து 40 தொகுதிகள் வரை தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கி தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தந்த மாவட்ட உட்கட்சி அரசியலால் பெருபாலான இடங்களில் கனிமொழி ஆதரவாளர்கள் போட்டியிடும் வாய்ப்புகளை இழந்தனர்.

இந்நிலையில் சொற்ப எண்ணிக்கையில் தமிழகம் முழுவதும் கனிமொழி ஆதரவாளர்கள் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர், இதனை தொடர்ந்து தேர்தல் முடியும் வரை அமைதியாக இருந்து வந்த கனிமொழி தேர்தல் முடிந்ததும் திமுகவில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்த அரசியல் நகர்வுகளை நகர்த்தி வருகிறார், உதயநிதி அரசியல் வளர்ச்சிக்கு கனிமொழி இடையூறாக இருந்து வருவதாக ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் நினைத்து வருகின்றனர்.

இதனால் கருணாநிதி மறைவுக்கு பின் கனிமொழியை ஓரம் கட்ட நினைத்த ஸ்டாலின் குடும்பத்தினர் திட்டங்கள் ஏதும் கனிமொழியிடம் ஈடுபடவில்லை, இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு பின் தனது அரசியல் நகர்வுகளால் மந்திரிசபையில் தனது ஆதரவாளர்கள் சிலர் இடம்பெற வைத்துள்ளார் கனிமொழி, இதே போன்று மந்திரிசபை பட்டியலில் இடம்பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சில அரசியல் நகர்வுகளை கனிமொழி ஈடுப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதன் முக்கிய நோக்கம் உதயநிதி மந்திரிசபையில் இடம் பெற வேண்டும் என்றால் தனக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என கனிமொழி எதிர்ப்பார்ப்பதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால், கனிமொழிக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்க வேண்டும் என்கிற கட்டாயத்துக்கு ஸ்டாலின்  தள்ளப்பட்டு அவரை சுற்றி கனிமொழி அரசியல் நகர்வுகளால் வைக்கப்பட்ட செக் தப்பிக்க முடியாமல் திணறி வந்துள்ளார் ஸ்டாலின்.

இதனை தொடர்ந்து திமுக துணை பொது செயலாளராக இருக்கும் சுப்புலக்சுமி ஜெகதீசன் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் சபாநாயகராக அறிவிக்கப்படுவார் என்றும் அவர் வகித்து வரும் துணை பொது செயலாளர் பதவி கனிமொழிக்கு கொடுப்பதாக  ஸ்டாலினிடம் இருந்து கனிமொழிக்கு தகவல் சென்றுள்ளதை தொடர்ந்து, உதயநிதி  அமைச்சர் ஆவதில் தனக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார் கனிமொழி என கூறபடுகிறது.