அமைச்சர் CV சண்முகம் மிக கடுமையாக திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் திமுகவை ஒருமையில் விமர்சனம் செய்ய கூடியவர் என்பது பரவலாக பேசக்கூடிய ஓன்று, திமுக தரப்பில் இருந்து எப்போதெல்லாம் அதிமுக மீது கடுமையாக விமர்சனம் வைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம், அதிமுக தரப்பில் இருந்து பதிலடி கொடுக்க அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, மற்றும் CV சண்முகம் ஆகியோர் களத்தில் இறங்கி பதிலடி கொடுப்பார்கள்.
இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனக்கே உள்ள பாணியில் நகைச்சுவையாக முக ஸ்டாலினை கலாய்த்து பதிலடி தருவார், ஆனால் அமைச்சர் CV சண்முகம் ஒருமையில் விளாசி தள்ளிவிடுவார், இதில் இவர்கள் இருவரில் யார் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு பதிலடி தரவேண்டும் என்பதை, ஸ்டாலின் பேசும் பேச்சுக்களை வைத்து அதிமுக தலைமை தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது, தற்போது CV சண்முகம் பேசிய வீடியோ ஓன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அதில், திமுக தலைவர் முக ஸ்டாலினை கடுமையாக பேசியுள்ளார், அவர் கூறியதாவது, நகைக் கடை எல்லாத்தையும் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னான் பண்ணிட்டானா? 39 எம்பி ஜெயிச்சு டெல்லிக்கு போனான், இதுவரைக்கும் 39 எம்பி மற்றும் ராஜ சபா எம்பி அனைத்தையும் சேர்த்து 50 எம்பிகள் இருக்கிறார்கள், ஒரு எம்பி-யாவது நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறார்களா.? நாங்கள் நகை கடையை தள்ளுபடி செய்ய வேண்டும், நீதியை கொடுக்க வேண்டும் என்று ஒரு எம்பி ஆவது பேசி இருக்கானா.?
அவங்க அப்பன் இரண்டு ஏக்கர் நிலம் தருவேன் என்று சொன்னான், தந்தானா? இதை எல்லாம் மக்களிடம் சொல்ல வேண்டும், இப்பவும் சொல்வான், இந்த தேர்தலுக்கும் வருவான், எதையாவது வாய்க்கு வந்ததை வாக்குறுதியா சொல்லுவான், அவன் உங்க வீட்டு காரர்களிடம் சொல்லுவான், எனக்கு ஓட்டு போட்டால் இரண்டு பொண்டாட்டி என்று கூட சொல்லுவான், இவர்களும் வாயைத் திறந்து ஓட்டு போட்டு விடுவார்கள், அவன் மானங்கெட்டவன் எதைவேண்டுமானாலும் சொல்லுவான்.
அவங்களுக்கு திட்டங்களை நிறைவேற்றும் வேண்டும் என்பது நோக்கமல்ல, மக்களை ஏமாற்றி மக்களை மயக்கி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வர வேண்டும், பதவிக்கு வரணும் அப்புறம் எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளலாம், இந்த மக்கள் எல்லாத்தையும் மறந்து விடுவார்கள், ஏதோ பத்து வாக்குறுதி கொடுத்தால் ஒன்றை நிறைவேற்றிவிட்டு ஒன்பதை விட்டு விட்டு கொள்ளை அடித்து விடலாம், இதுதான் அவர்களின் நோக்கம் என CV சண்முகம் பேசிய வீடியோ ஓன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.