நாடு முழுவதும் கொரோனாவின் 2அலை மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கொரோனாவல் இந்தியா மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் தமிழகத்தில் மட்டும் கொரோனாவின் பாதிப்பு ஆயிரத்தை கடந்து வருகிறது. கொரோனாவின் இந்த சங்கிலித் தொடர்பை துண்டிக்க வாரம் ஒரு முறை ஊரடங்கு பிறப்பித்தும் தமிழக அரசால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.
தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக கொரோனாவை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளை உருவாக்கி வருகிறது. ஆனால் கொரோனா பரவல் குறைந்தபாடு இல்லை என்பதால் வரும் மே10 முதல் மே 24தேதி வரை முழு ஊரடங்கு இன்று அமல் படுத்தியுள்ளது.
சுற்றுலா தளங்கள், தனியார் விடுதிகள், அழகு நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மத மற்றும் சமுதாயம் நிகழ்ச்சிகள், முடி திருத்தும் நிலையம், மற்றும் போக்குவரத்து இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. துக்க நிகழ்ச்சிகளுக்கு 20 பேர் மேல் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. காய்கறி கடைகள், கறி கடைகள் மற்றும் நியாயவிலைக் கடைகள், டீக்கடைகள் 8 மணி முதல் 12 மணி வரை இயங்க அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. போக்குவரத்து இயங்க முற்றிலும் தடை விதித்துள்ளது.
ஊடக மட்டும் பத்திரிக்கைகளுக்கு இந்தத் தடை உத்தரவு செல்லாது. ஊரடங்கு காலகட்டம் வரை டாஸ்மாக் இயங்க அனுமதி கிடையாது, ஆதரவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்கள் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதி உண்டு. மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது முக்கிய துறை அலுவலகங்கள் மட்டும் இயங்கும் என தமிழக அரசு மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. இதான் மூலம் கொரோனா சங்கிலி பரவல் ஓரளவு கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.