கொடைக்கானலில் உள்ளூர்வாசிகளுக்கு ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே பேருந்துகளில் பயண சீட்டு…

0
Follow on Google News

கொடைக்கானலில் பேருந்துகளில் பயணிப்போர் ஆதார் வைத்திருந்தால் மட்டுமே பயணச்சீட்டு. வெளிநபர்கள் பயணிப்பதை கண்டுபிடிக்க புதிய திட்டம். கொரோனா தொற்றால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அளித்து வருகிறது.

கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நேற்று முதல் கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் ஒரு சுற்றுலா தளம் என்பதால் வெளி நபர்கள் பயணிக்க வாய்ப்புகள் உள்ளது.

இதனால் கொரோனா தொற்று அதிகரிக்க கூடும் என்பதால் தமிழ போக்குவரத்து புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. கொடைக்கானலில் பேருந்துகளில் பயணிக்கும் உள்ளூர்வாசிகள் ஆதார் அட்டையை காட்டினால் மட்டுமே பேருந்துகளில் பயணிக்கும் டிக்கெட் வழங்கப்படும். இதன் மூலம் வெளி நபர்கள் பயணிப்பதை தடுக்க முடியும்.

மேலும் இந்த சுற்றுலா தளமான கொடைக்கானலுக்கு வேறு ஏதும் அத்தியாவசிய காரணங்களுக்காக வருபவர்கள் கலெக்டர் அனுமதி பெற்று இ-பாஸ் உடன் வருபவர்களே அனுமதிக்கப்படுகிறார்கள். இ-பாஸ் இல்லாதவர்கள் கொடைக்கானல் மலை அடிவாரத்திலேயே வாகன சோதனையின் மூலம் அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே உள்ளூர் வாசிகள் ஆதாருடன் பேருந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.