போலீசை பார்த்து திருடன் அலறுவது போல்..புதிய ஆளுநரை பார்த்து இவர்கள் அலறுவது ஏன்.?

0
Follow on Google News

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். நாகாலாந்தின் ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவியைத் தமிழகத்தின் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஆளுநர் நியமனம் குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில். உளவுத்துறையோடு சுலபமாக தொடர்ப்பில் உள்ள ஒருவரை தமிழக ஆளுநராக வேண்டுமென்றே மத்திய அரசு நியமித்துள்ளது. மத்திய அரசானது இன உணர்வையும், மொழி உணர்வையும் அழிக்கக் கூடிய ஒருவரை ஆளுனராக நியமித்து உள்ளது.ஜனநாயக முறைப்படி பணியாற்றக் கூடிய ஒருவரை ஆளுனராக பணியமர்த்த வேண்டும் என்றும்,

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். யாரை ஆளுநராக கொண்டு வந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாட்டில் ஆட்சியை கலைத்து விடும் தெம்பும் திராணியும் கிடையாது என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதே போன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், முழுக்க, முழுக்க காவல் துறை பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவியை நாகாலாந்து ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில், அவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இது போன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது. இதனைக் கண்கூடாகக் கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். முன்னாள் காவல் துறை அதிகாரியான கிரன் பேடியை புதுச்சேரி ஆளுநராக நியமித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக நடத்திய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நாடே பார்த்து நகைத்தது.

விளம்பரமே கூடாது என்று செயல்படும், நேர்மையான ஆட்சியை தந்து கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே ஆர்.என்.ரவியை மோடி அரசு ஆளுநராக நியமித்திருக்கிறதோ? என்று சந்தேகப்படுகிறேன். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழகத்தில் ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால், மக்களைத் திரட்டி ஜனநாயக சக்திகள் போராட வேண்டிய சூழல் உருவாகும் என எச்சரிக்க விரும்புகின்றேன் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேர்மையான அதிகாரியாகவும். பல சாதனைகளை செய்து தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாத நிலையில். போலீசை பார்த்து திருடன் அலறுவது போன்று ஏன் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பார்த்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் அலறுவது ஏன் என பொது தளத்தில் பலர் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடதக்கது.