முக ஸ்டாலின் மக்களை குழப்பும் வகையில் விஷமப் பிரச்சாரங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டுவோம்.! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சபதம்.!

0
Follow on Google News

திருமங்கலம் தொகுதியில் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து, புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து, தகவல் தொழிநுட்ப பிரிவு சார்பில் நடைபெற்ற ஆலோசனையுடன் பங்கேற்று அதன்பின் கழக அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்கை்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிறைவேற்றினார்.

அதன் விவரம் வருமாறு:-

நாட்டின் எதிர்கால தூண்களான இளைய சமுதாயத்தின் வளர்ச்சிக்காக கிள்ளி கொடுத்தால் போதாது என்று பல்வேறு திட்டங்களை அள்ளி அள்ளி கொடுத்து ஒட்டுமொத்த இளைய சமுதாயத்தின் இதயதெய்வமாக புரட்சித்தலைவி அம்மா திகழ்ந்து வருகிறார். அம்மாவின் பாத தடத்தில் அடிபிறழாமல் ஆட்சி செய்து வரும் நமது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இளைய சமுதாயத்திற்காக பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார்கள்.

புரட்சித்தலைவி அம்மா உலக முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் நடத்தி அதன் மூலம் தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்த்தார். அதனை தொடர்ந்து அம்மாவின் வழியில் முதலமைச்சரும் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதன் மூலம் தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்த்தார்.

உலகத்தையே கொரோனா என்ற தொற்று நோயால் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போது அதைப்பற்றி கவலைப்படாமல் மக்கள் நலனே தன் நலன் என்று தமிழக வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் நமது முதலமைச்சர் இந்தக் கொரோனா காலத்திலும் கூட பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூலம் 42 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து அதன் மூலம் தமிழகத்திற்கு ரூ.31,464 கோடி அளவில் தொழில் முதலீட்டை ஈர்த்து இதன் மூலம் இந்தியாவிலேயே இந்த கொரோனா காலத்தில் அதிக முதலீடு ஈர்த்த மாநிலம் தமிழகம் தான் என்ற வரலாற்றைப் பெற்றுத் தந்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தில் ரூ. 10,055 கோடி மதிப்பில் 14 புதிய தொழில் நிறுவனங்கள் திட்டங்களை தொடங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. மேலும் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற முதலீடு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றை சாளர அனுமதிக்கான உயர்நிலைக் கூட்டத்தில் ரூ.15,000 கோடி முதலீட்டில் 34 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். இதன்மூலம் 23,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்,

இதனை தொடர்ந்து மூன்றாவது கட்டமாக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு உட்பட 10 மாவட்டங்களில் 25,213 கோடி முதலீட்டில் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கி இதன்மூலம் 49 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்த முதலமைச்சருக்கும், அவருக்கு துணையாக இருக்கும் துணை முதலமைச்சருக்கும் கழக அம்மா பேரவை சார்பில் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற திட்டங்களின் மூலம் பொருளாதார வளர்ச்சி தேசிய அளவில் 4.2 சதவீதம் இருந்தபோதிலும் தமிழகத்தின் வளர்ச்சியை 8.03 சதவீதமாக உயர்த்தியும், இதனை தொடர்ந்து இந்தியாவில் தொழில் துவங்க சிறந்த மாநிலம் தமிழகம் தான் என்று இந்திய அளவில் பாராட்டைப் பெற்றது மட்டுமல்லாது, இந்திய கடலோர மாநிலங்களில் ஏற்றுமதியில் தமிழகத்தை மூன்றாவது இடத்தை பெற்றுத்தந்ததும், தொடர்ந்து இந்திய அளவில் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்துச் சென்று எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரத்திற்கு சரியான சவுக்கடி கொடுத்து, இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் லட்சிய முழக்கங்களை நிறைவேற்றும் வகையில் மக்கள் பணியினை முதலமைச்சர் செய்து வருகிறார் அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்.

இந்தியாவிலேயே தமிழகம் தான் அதிக முதலீடுகளை ஈர்த்து உள்ளது என்று பல்வேறு ஊடகங்கள், பொருளாதார வல்லுனர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் அம்மா அரசின் மீது இளைஞர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் மக்களை குழப்பும் வகையில் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதை இக்கூட்டம் வன்மையாக கண்டிப்பதோடு இதே திமுக ஆட்சியில் தான் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன்மூலம் தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்தனர் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

இதுபோன்ற திமுக விஷமப் பிரச்சாரங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டி கழக அரசின் சாதனை மக்களிடத்தில் எடுத்துரைத்து இமாலய வெற்றிக்கு அயராது பாடுபடுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது