வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு தலைவர்கள் வாழ்த்து….

0
Follow on Google News

இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் இரண்டு தனி பதக்கங்கள் வாங்கிய ஒரே வீராங்கனை மற்றும் இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். கடந்த ஒலிம்பிக்கில் ஒரு வெண்கலம், இந்த ஒலிம்பிக்கில் ஒரு வெண்கலம் என்று பிவி சிந்து பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் பிவி சிந்து ஆடினார். இவர் சீனாவின் பிங்க்ஜியோவை எதிர்கொண்டார். 21-13, 21-15 என்ற புள்ளி கணக்கில் இதில் சீன வீராங்கனையை வீழ்த்தி பிவி சிந்து வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவிற்காக இரண்டாவது பதக்கம் வாங்கி கொடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மகளிர்க்கான பேட்மிட்டன் போட்டியில் சீன வீராங்கனையை கலங்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்ற பிவி சிந்துவிற்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர், தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், பாட்மிண்டனில் வெண்கலம் வென்ற பிவி.சிந்துவின் சிறந்த உழைப்புக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். எதிர்காலத்தில் அவர் மேலும் பல பதக்கங்களை தேசத்திற்காகப் பெற வாழ்த்துகிறேன்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாட்மிண்டனில் வெண்கலம் வென்ற பிவி.சிந்துவின் சிறந்த உழைப்புக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். எதிர்காலத்தில் அவர் மேலும் பல பதக்கங்களை தேசத்திற்காகப் பெற வாழ்த்துகிறேன். பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 2016 ரியோ ஒலிம்பிக்கில் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் இன்று டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு வெண்கலப் பதக்கம், பிவி.சிந்து இந்தியாவின் பெருமை. இந்த உண்மையான சாம்பியனுக்கு வாழ்த்துக்கள் & நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.