கடந்த மாதம் ஜனவரி 9ஆம் தேதி மானாமதுரை கோர்ட் அருகே நின்று கொண்டிருந்த மணி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு சம்பந்தமாக மதுரை சட்டக் கல்லூரியில் படித்துவரும் அக்னி ராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சில நாட்களில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த அக்னி ராஜ் தினமும் மானாமதுரையில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்து இட வேண்டும்.
தினமும் மானாமதுரை காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட்டு வந்த அக்னி ராஜ். சில நாட்கள் முன்பு கையெழுத்திட்டு காவல் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மறைந்திருந்த சில மர்ம கும்பல், ஆயுதங்களுடன் அவரை சுற்றியது. அக்னி ராஜ் சுதாரித்துக் கொள்வதற்குள் இந்த கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்தது.
இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மானாமதுரை காவல்துறை உயிரிழந்த அக்னி அக்னி ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியது. காவல்துறை தனிப்படை அமைத்து கொலை செய்த கும்பலை தேடி வந்தது. காவல்துறையின் தேடுதல் வேட்டையில் கொலை செய்த 4 பேரும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்…