எல்.முருகன் மத்திய அமைச்சர்… பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரன் என்னாச்சு?

0
Follow on Google News

மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட்டு இன்று புதிதாக 43 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இந்த அமைச்சரவை பட்டியலில் தமிழகத்தில் 2 பெயர்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகனுடைய பெயரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரனுடைய பெயரும் இடம் பெற்றிருந்தது.

இதில் யாருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு கொடுத்தது என்ற குழப்பத்தில் இருந்தது மோடி அரசு. இந்த முறை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற எல்.முருகன் கட்சியை சிறப்பாக வழிநடத்தி தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளில் 4 தொகுதிகளில் வெற்றி பெற உறுதுணையாக இருந்தார். ஆனால் எல்.முருகன் சிறிய வாக்கு வித்தியாசத்தில் போட்டியிட்ட தாராபுரம் தெகுதியில் தோல்வியை சந்தித்தார்.

ஆனால் தமிழகத்தில் பாஜகவை நிலைநிறுத்த எல்.முருகனுடைய கடுமையான உழைப்பால் இந்த முறை நான்கு இடங்களை அவரை பிடிக்க முடிந்தது. இதனால் எல்.முருகன் மீது பாஜக தலைமை நல்ல மதிப்பு வைத்திருந்தது. ஆனால் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவிகளை வழங்குவதில் சிக்கலும் இருந்தது. முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவருடைய மகன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரனுக்கு இந்த மத்திய அமைச்சர் பதவியை கேட்டு போராடி வந்தார்.

கடந்த ஆண்டே மத்திய அமைச்சரவையில் தனது மகனுக்கு இடம் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு தஞ்சம் அடைந்தார். இந்த முறை அமைச்சரவை விரிவாக்கம் அடைவதால் எப்படியாவது அமைச்சரவையில் இடம் கிடைத்து விடும் என்று பன்னீர்செல்வம் எதிர்பார்த்தார். இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

வழக்கறிஞரும் தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகன் கடந்தஆண்டு மார்ச் மாதம் தமிழக பாரதிய ஜனதா கட்சி உடைய தலைவரானார். தீராத உழைப்பால் தற்போது மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். பாஜகவின் தாழ்த்தப்பட்டோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற பின்பத்தை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகன் மூலம் உடைத்துள்ளது. எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றது தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக வுக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுத்துள்ளது.