உதயநிதிக்கு எதிராக சேப்பாக்கம் தொகுதியில் களம் இறக்கப்பட்ட குஷ்பு.! தொகுதியை மாற்றி தெறித்து ஓடும் உதயநிதி.!

0
Follow on Google News

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து, அந்த தொகுதி முழுவதும் தேர்தல் வேலையை விறுவிறுப்பாக நடைபெற திட்டமிட்டு அதற்கான வேலையையும் தொடங்கப்பட்டது, இந்நிலையில் நடிகை குஷ்பு பாஜக சார்பில் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது, இதன் காரணமாக சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற பொறுப்பாளராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

சேப்பாக்கம் தொகுதியில் 1996, 2001, 2006 என தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கருணாநிதி, 2011 ஆம் ஆண்டு திருவாரூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தபோது, அப்போது திமுகவில் இருந்த நடிகை குஷ்பு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்க பட்டது, 2011 சட்டசபை தேர்தலுக்கு ஒரு வருடத்துக்கு முன்பே அன்று திமுக தலைவராக இருந்த கருணாநிதி அவர்களின் உத்தரவின் படி சேப்பாக்கம் தொகுதி நடிகை குஷ்புவுக்கு உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து 2011 சட்டசபை தேர்தலுக்கு ஒரு வருடத்துக்கு முன்பு இருந்தே குஷ்பு சேப்பாக்கம் தொகுதியில் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தார், அங்கே திமுக தொண்டர்களும் குஷ்புவுக்கு ஆதரவாக வேலை செய்து வந்தனர்,ஆனால் திமுகவில் குஷ்புவின் வளர்ச்சி முக ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை, சேப்பாக்கம் தொகுதியை குஷ்புவுக்கு வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார் ஸ்டாலின் இதனை தொடர்ந்து 2011 தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருந்த குஷ்புவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் குஷ்பு போட்டியிடுவது உறுதியாகி உள்ளது, இதனை தொடர்ந்து சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதாக இருந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அதே தொகுதியில் அவரை எதிர்த்து குஷ்பு போட்டியிட இருப்பதால் தொகுதியை மாற்றி கொள்ள முடிவு செய்துள்ளார், இந்நிலையில் தனது தாத்தா சொந்த தொகுதியான திருவாரூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து தொகுதியை ஆய்வு செய்துள்ளார்.

அதில் சமீபத்தில் அதிமுக அரசு விவசாய கடனை ரத்து செய்தது, அதற்கு முன்பு பொங்கல் பரிசு ரூபாய் 2500, கொரோனா நிவாரணம் ரூபாய் 1000 என வழங்கியுள்ளது அதிமுகவுக்கு சாதகமாக திருவாரூர் தொகுதி மாறியுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிய வந்துள்ளது, இதனை தொடர்ந்து வரும் சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடலாமாஎன உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.