கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உடுமலைப்பேட்டையில் பட்ட பகலில் சங்கர் படுகொலை நாட்டையே உலுக்கியது, உடுமலைப்பேட்டையை சேர்ந்த கவுசல்யா- சங்கர் இருவரும் காதலித்து கவுசல்யா பெறோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதை தொடர்ந்து கவுசல்யா வீட்டை சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டி சங்கரை படுகொலை செய்தனர். இதன் பின்பு திராவிட அமைப்பை சேர்ந்த சிலர் அரவணைப்பில் இருந்து வந்தார் கவுசல்யா.
இதனை தொடர்ந்து ஆணவ படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா, சக்தி எனும் பறையிசை கலைஞரை கடத்த 2019ம் ஆண்டு இரண்டாவது திருமணம் திராவிட பகுத்தறிவு தலைவர்கள் சிலர் முன்னின்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் கவுசல்யா இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சக்தி ஏற்கனவே பல பெண்களை ஏமாற்றியதும், அதில் திருநங்கையும் இருப்பதாக பெரும் பிரச்சனை உருவானது.
அதில் ஒரு இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றி சக்தி கர்ப்பமாக்கிய அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவை கலைக்க சக்தியுடன் இணைந்து கவுசல்யா செயல்பட்டதாக கூறப்பட்டது.இதனை தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பிரச்சனையானதும், திராவிட சமூக சீர்திருத்த போராளிகள்,கொளத்தூர் மணி, தியாகு தலமையில் நடந்த விசாரணை முடிவில் உலகே வியக்கும் வகையில் சில விசித்திரமான தீர்ப்புகள் வழங்கப்பட்டது.
அதில் ஆறு மாசம் சக்தி பொது மேடையில் பறையடிக்க கூடாது, அவரது நிமிர்வு கலையகத்திலிருந்து வெளியேற வேண்டும், மூன்று லட்சம் ரூபாய் அபராத தொகை கட்ட வேண்டும், இந்த பணத்தை EMI போன்று தவணை முறையிலும் கட்டலாம் என ஒரு பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கி கருவை கலைக்க செய்த சக்திக்கு தண்டனையாக தீர்ப்பு வழங்கினார்கள் திராவிட சபையில் நடைபெற்ற கட்டப்பஞ்சாயத்தில் நடுவராக இருந்த சமூக சீர்திருத்த போராளிகள்.
இந்நிலையில் கவுசல்யா – சக்தி இருவரும் திருமணம் செய்து கொன்டு சுமார் இரண்டு வருடங்களான நிலையில், தற்போது தனது முகநூல் பக்கத்தில், நானும் சக்தியும் பிரிகின்றோம், ஒரு வருடமாக மனதளவில் என்னை காயப்படுத்தியதை தொடர்ந்து, இதற்க்கு மேல் அவரோடு என்னால் வாழ இயலாது, விவாகரத்து திங்கள் அன்று விண்ணப்பிக்கிறேன் என கவுசல்யா தனது முகநூலில் நேற்று பதிவு செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து சில பெரியாரிஸ்ட்கள் இந்த பதிவை உடனே நீங்குகள், சங்கிகள் பார்த்தால் கிண்டல் செய்வார்கள் என தெரிவித்ததை தொடர்ந்து கவுசல்யா தனது பதிவை நீக்கியுள்ளார். இந்நிலையில் கவுசல்யா – சக்தி விவகாரம் குறித்து, திராவிட சமூக சீர்திருத்த போராளிகள்,கொளத்தூர் மணி, தியாகு தலைமையில் விரைவில் விசாரணை நடத்தப்படலாம் என கூறப்படும் நிலையில், அதில் என்ன தீர்ப்பு வழங்க இருக்கிறார்கள் என பலர் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பது குறிப்பிடதக்கது