மதுரையில் கருணாநிதி சிலை திறப்பு.! சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் Statue Of Corruption ஹாஸ்டக் .!

0
Follow on Google News

நாளை மதுரையில் கருணாநிதி சிலை திறக்க இருப்பதை தொடர்ந்து, சமூக வலைதளத்தில் Statue Of Corruption என்ற ஹாஸ்டக் ட்ரெண்டாகி வருகிறது, சமூக வலைதளத்தில் திமுக மற்றும் பாஜக இடையே அடிக்கடி ஹாஸ்டக் ட்ரென்ட் செய்வதில் கடும் போட்டி நிலவி வரும், தொடக்கத்தில் இந்த ட்ரெண்ட் செய்வதை தொடங்கி வைத்தவர்கள் திமுக தரப்பினர், ஆனால் இன்று அவர்களுக்கு அது எதிராக அமைந்துள்ளது, தொடக்கத்தில் பிரதமர் மோடி தமிழகம் வரும் போது Go Back மோடி என்கிற ஹாஸ்டக் ட்ரெண்ட் செய்வதை வழக்கமாக செய்து வந்தனர் திமுகவினர்.

ஒரு கட்டத்தில் திமுகவினரின் இந்த செயல் இல்லை மீறி சென்றதை தொடர்ந்து பாஜக பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்டாலின் லண்டன் சென்று சென்னை திருப்பியதை அறிந்த பாஜகவினர் GoBackStalin என்ற ஹாஸ்டக் ட்ரெண்ட் செய்தனர், பாஜகவினருடன் திமுக எதிர்ப்பாளர்கள் அதிமுக, பாமக போன்ற கட்சிகள் ஒன்றிணைத்து GoBackStalin என்ற ஹாஸ்டக் ட்ரெண்ட் செய்து இந்தியா அளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடிக்க வைத்தனர்.

இதனை தொடர்ந்து ஸ்டாலின் பழமொழிகள், ஓசி பிரியாணி திமுக, கடப்பாக்கல் திமுக, பியுட்டி பார் திமுக என திமுகவை ரவுண்டு கட்டி வெளுக்க தொடங்கினர் திமுக எதிர்ப்பாளர்கள், மேலும் கருணாநிதி பிறந்த தினத்தன்று HBD Father Of Corruption என்று ட்ரெண்ட் செய்தும் கருணாநிதி சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறந்த அன்று Statue Of Corruption என்கிற ஹாஸ்டக் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி சென்னை வந்த போது பாஜக மற்றும் அதிமுக கூட்டணி காட்சிகள் TNWelcomesModi என்று ட்ரெண்ட் செய்தனர், ஆனால் Go Back Modi என்று திமுகவினர் மீண்டும் ஆட்டத்தை தொடங்கி வைத்துள்ளனர், இதனை தொடர்ந்து திமுகவுக்கு மீண்டும் தக்க பதிலடி கொடுக்க முடிவு செய்த பாஜக மற்றும் திமுக எதிர்ப்பாளர்கள் நாளை மதுரையில் கருணாநிதி சிலை திறக்க பட இருக்கும் நிலையில் Statue Of Corruption என்கிற ஹாஸ்டக் ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.

ஒரு பக்கம் கருணாநிதி சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளத்தில் Statue Of Corruption என்கிற ஹாஸ்டக் ட்ரெண்டாகி வரும் நிலையில், இன்று மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கருணாநிதி சிலை திறக்க அனுமதிக்க கூடாது என்று பாஜக சார்பில் அந்த கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் மனு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்நிலையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை திமுக தலைவர் முக ஸ்டாலின் கருணாநிதி சிலை திறக்க மதுரை வருவது குறிப்படத்தக்கது.