சமச்சீரான வளர்ச்சியின்மை என்று சரியான புகார்களை முன் வைத்து மாநிலத்தை 3,4 ஆகப் பிரிக்கக் குரல் கொடுப்பது இங்கே பல பிரச்சனைகளுக்குச் சரியான பதிலடியாக இருக்கும் என எழுத்தாளர் மரித்தாஸ் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. பொதுவாக அவர்கள் உருவாக்கும் கருத்தியலில் சென்று சிக்கிக் கொள்வது காலம் காலமாக நடக்கும் அரசியல்.
திமுக திக கும்பல் , அதன் பின்னால் நிற்கும் தீவிரவாத மதம் மாற்றும் கும்பல் இதை எல்லாம் சமாளிக்க இவை பேசும் பிரிவினைவாத கொள்கையைச் சரியாக எதிர் கொள்ள நாமும் பிரிவினைவாதம் பேசத் தொடங்குவது தான் சரியான countermovement ஆக இருக்கும். Sociology ஆய்வுகள் அது சொல்லும் வரலாறு எல்லாமே countermovement உருவாக்குவதில் தான் புத்திசாலிதனமே உள்ளது. திமுக உருவாக்கிய திராவிட சித்தாந்தம் புரிந்து மக்கள் ஆதரித்து வெற்றி பெறவில்லை.
மாறாகக் காமராஜர் சார்ந்த ஜாதிக்கு எதிராக வெறுப்பு பேசியும் , பிராமண வெறுப்பு பேசியும் , மொழி வெறுப்பைத் தூண்டியும் தான் ஆட்சிக்கு வந்தனர். தாங்கள் செய்யும் அனைத்து தவறுகள், ஊழல்கள் அனைத்தையும் சமாளிக்க இந்த வெறுப்பு பேசும் யுக்தி திமுக எப்போதும் கையாழும். எனவே திமுக பிரிவினைவாததிற்கு பதிலடி கொடுத்து நகர வேண்டும் என்றால் நாமும் countermovement பிரிவினைவாதம் பேசத் தெரிய வேண்டும்.
அதே நேரம் தேச நலனுக்கு எதிராக கருத்தியல் உருவாகிவிடக் கூடாது. என்னை கேட்டால் தமிழகத்தை 3,4 மாநிலமாகப் பிரிக்கச் சொல்லி குரல் எழுப்புவது மிகச் சாதுரியமான விசயம். கொங்கு நாடு , கன்னியாகுமரி தனி யூனியன் என்று அவர் அவருக்குத் தகுந்த சரியான காரணங்களோடு தாராளமாகப் பேசத் தொடங்க வேண்டும். நடந்தாலும் நல்லதே நடக்கவில்லை என்றாலும் பெரிய இழப்பு இல்லை ஆனால் நிச்சயம் திமுக கோஷ்டி அலறும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை.
தமிழகம் என்று இருப்பதால் சென்னை தவிர மற்ற மாவட்டங்கள் ஏற்படும் இழப்பு, நிர்வாக சிக்கல் , சமச்சீரான வளர்ச்சியின்மை என்று சரியான புகார்களை முன் வைத்து மாநிலத்தை 3,4 ஆகப் பிரிக்கக் குரல் கொடுப்பது இங்கே பல பிரச்சனைகளுக்குச் சரியான பதிலடியாக இருக்கும். நியாயமும் கூட. உண்மை இல்லாமல் செயற்கையாக பேசவும் முடியாது. உண்மை என்றால் மக்கள் ஏற்பார்கள்.
மீண்டும் தெளிவாகக் கூறுகிறேன் இது தனி நாடு கோரிக்கையல்ல தனி மாநில கோரிக்கை. எனவே தேச நலனுக்கு எதிராக நிச்சயம் செல்லாது. ஆனால் இதை திமுக நிச்சயம் தாங்கிக் கொள்ள முடியாது திமுக அலறுவது உறுதி என மரித்தாஸ் தெரிவித்துள்ளார்.