வரும் 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவியை பெறுவதற்கு கனிமொழி தனது அரசியல் நகர்வுகளை நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது, கருணாநிதி மறைவுக்கு பின்பு முக அழகிரியை கட்சியில் இருந்து ஓரம் காட்டியது போன்று கனிமொழியையும் ஓரம் கட்ட முடிவு செய்தது முக ஸ்டாலின் குடும்பம், ஆனால் கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை தான் கட்சியில் தமக்கு முக்கியதுவம் என்பதை கருணாநிதி உயிரோடு இருக்கும் பொழுதே உணர்ந்தார் கனிமொழி.
இதனை தொடர்ந்து திமுகவில் தன்னை நிலை நிறுத்த தமிழகம் முழவதும் மாவட்டம் தோறும் தனக்கென ஒரு ஆதரவாளர் வட்டத்தை உருவாக்கினார் கனிமொழி, இதனை தொடர்ந்து கடந்த 2016ஆம்ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதே தமிழகம் முழுவதும் தனது ஆதரவாளர்களுக்கு கணிசமான தொகுதிகளை பெற்று தந்து போட்டியிடும் வாய்ப்பை பெற்று தந்தார் கனிமொழி, இதனை தொடர்ந்து திமுகவில் கனிமொழிக்கு விஸ்வாசமாக இருக்கும் நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புகளை பெற்று தருவார் என்கிற நிலை உருவானது.
இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலிலும் தமிழகம் முழுவதும் தனது ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் பெற்று தந்தார் கனிமொழி, இந்நிலையில் கருணாநிதி மறைவுக்கு பின் கனிமொழியை ஓரம் கட்ட நினைத்த ஸ்டாலின் குடும்பத்தினரின் திட்டங்கள் அனைத்தையும் தனது ராஜதந்திரம் மூலம் தவிடுபொடியாக்கினார் கனிமொழி, தற்போது திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக தனது ஆதரவாளர்களின் பலத்தால் ஸ்டாலினுக்கே சவால் விடும் இடத்துக்கு திமுகவில் இருந்து வருகிறார் கனிமொழி.
இந்நிலையில் வருகின்ற சட்டசபை தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு 50 தொகுதி வரை கனிமொழி கேட்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, இதற்கான தொகுதிகளை தேர்வு செய்து தேர்தல் பணியையும் தமிழகம் முழுவதும் தொடங்கிவிட்டனர் கனிமொழி ஆதரவாளர்கள், வரும் தேர்தலில் திமுக சார்பில் 50 தொகுதி வரை போட்டியிடும் கனிமொழி ஆதரவாளர்கள், வரும் சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால், அதிக இடங்களில் கனிமொழி ஆதரவாளர்கள் வெற்றி பெரும் பட்சத்தில் துணை முதல்வர் பதவியை பிடிக்க கனிமொழி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.