திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் திமுகவை முக ஸ்டாலின் குடும்பம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது, முக அழகிரியை திமுகவில் இருந்து ஓரம் கட்ட நினைத்த ஸ்டாலின் குடும்ப பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது, ஆனால் அனைத்தையும் தனது ராஜதந்திரத்தால் வெற்றி கண்டார் கனிமொழி. திமுகவில் இருந்து முக அழகிரியை ஓரம் காட்டியது போன்று எந்த நேரம் தாம் ஸ்டாலின் குடும்பத்தால் ஓரம் கட்ட படுவோம் என்பதை கருணாநிதி உயிருடன் இருக்கும் காலத்திலே உணர்ந்திருந்தார் கனிமொழி.
இந்நிலையில் தனக்கென ஒரு ஆதரவாளர் வட்டாரத்தை திமுகவில் உருவாக்கி ஸ்டாலின் மற்றும் அவருடைய குடும்பத்துக்கு பெரும் சவாலாக விளங்கி வருகிறார் கனிமொழி, இதனை தொடர்ந்து கனிமொழி திமுகவில் இருந்து ஓரம் கட்ட நினைத்த ஸ்டாலின் அவரை அனுசரித்து போகவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார், ஆகையால் திமுகவின் முக்கிய நிகழ்ச்சியில் கனிமொழி இடம்பெற்றார், மேலும் டெல்லியின் முகமாக TR பாலுவை திமுக தலைமை முன்னிறுத்தினாலும் திமுகவின் டெல்லியின் முகமாக கனிமொழி தான் வலம் வருகிறார்.
இந்நிலையில் ஸ்டாலினுக்கு அடுத்த தலைவர் யார் என்பதில் திமுக ஆதரவாளர் மத்தியில் உதயநிதியை ஒரு தரப்பினரும் கனிமொழியை மற்றொரு தரப்பினரும் முன்னிறுத்தி வேலை செய்து வருகின்றனர், மேலும் தமிழகம் முழுவதும் கனிமொழி மற்றும் உதயநிதி ஆதரவாளர்கள் மத்தியில் உச்சகட்ட பனிப்போர் நடந்து வருவது குறிப்பிடதக்கது, விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பயணத்தை உதயநிதி மற்றும் கனிமொழி இருவரும் தமிழக முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதில் உதயநிதி பங்குபெறும் நிகழ்ச்சிக்கு வரும் கூட்டத்தை விட கனிமொழிக்கு இரட்டிப்பாக உள்ளது ஸ்டாலின் குடும்பத்தை கோவத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் கனிமொழி செல்லும் நிகழ்ச்சிகளை இருட்டடிப்பு செய்யவும் உதயநிதியின் நிகழ்ச்சிகளை பிரபல படுத்த மீடியா மற்றும் தனது கட்சி ஐடி பிரிவு மூலம் செயல்படுத்த முயன்றன ஸ்டாலின் குடும்பத்தார், ஆனால் கனிமொழி தனக்கென ஒரு ஐடி பிரிவை உருவாக்கி தான் பங்குபெறும் நிகழ்ச்சியை பிரபல படுத்தி வருபவது ஸ்டாலினுக்கு அடுத்தகட்ட தலைவர் கனிமொழி என்ற தோற்றம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.