கனிமொழி ஆட்டம் குளோஸ்.. திமுக டெல்லியின் முகமாக சபரீசனை களம் இறக்க முடிவு.!

0
Follow on Google News

திமுகவின் டெல்லியின் முகமாக திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் மருமகன் சபரீஷனை முன்னிறுத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது, திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவுக்கு பின் முக அழகிரியை அரசியலில் இருந்து ஓரம் காட்டியது போன்று கனிமொழியை ஓரம் கட்ட நினைத்த முக ஸ்டாலின் குடுப்பதினாரால் அதை உடனடியாக செய்ய முடியாதவாறு கனிமொழி அவருடைய அரசியல் நகர்வுகளை செய்தார்.

இதனை தொடர்ந்து உடனே கனிமொழியை அரசியல் இருந்து கட்டம் கட்ட முடியாது என்பதை உணர்ந்த ஸ்டாலின் குடுப்பதினார், படி படியாக அதற்கான வேலைகளை செய்து வந்துள்ளனர், கருணாநிதி மறைவுக்கு பின் மாநில அரசியலில் கனிமொழி தலையீடு செய்யாதபடி டெல்லியின் முகம் என அவரை உசுப்பேத்தி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கூட 2016 தேர்தலில் போட்டியிட்ட கனிமொழி ஆதரவாளர்கள் பெரும்பாலனவர்களுக்கு இம்முறை சீட் வழங்கவில்லை இதற்கு காரணம் கனிமொழி டெல்லி அரசியலை கவனிக்கட்டும் என கூறப்பட்டது.

இந்நிலையில் சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில், அதிமுகவின் ராஜ்ய சபா உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமியும் வைத்திலிங்கமும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அவர்கள் ராஜ்யசபா எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதற்கு முன்னதாக, மார்ச் மாதம் அதிமுக ராஜ்ய சபா எம்.பி முகமது ஜான் காலமானார். தமிழ்நாடு சார்பில் 3 ராஜ்ய சபா எம்.பி பதவிகள் காலியாக உள்ளது. இந்த 3 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கும் தற்போது தேர்தல் நடத்தினால், இந்த 3 எம்.பி பதவிகளும் திமுகவுக்கே கிடைக்க வாய்ப்ள்ளது.

இதனை தொடர்ந்து ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த தங்க தமிழ்ச்செல்வனும் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த கார்த்திகேய சிவசேனாபதியும் ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதில் முக்கிய நபராக மு.க.ஸ்டாலினுடைய மருமகன் சபரீசன் ராஜ்ய சபா எம்.பி-யாக நியமிக்கப்பட்டு டெல்லியின் திமுகவின் டெல்லியின் முகமாக முன்னிறுத்துவர் என கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து கனிமொழியின் டெல்லி அரசியலுக்கு ஆப்பு வைத்துவிட்டு அவரை தூத்துக்குடி தொகுதிக்குள் மட்டும் அரசியல் செய்தால் போதும் என அந்த ஒரே தொகுதியில் கனிமொழியை முடக்க முக ஸ்டாலின் குடுமப்த்தினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.