ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஆதரித்து தீர்மானம் போட்ட நீதி கட்சி.! திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பேராசிரியர்..

0
Follow on Google News

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தொடங்கி நடைபெற்றது. ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, நீதிக் கட்சி ஆட்சியின் தொடர்ச்சி தான் இப்போதைய திமுக ஆட்சி, நீதிக் கட்சியின் தொடர்ச்சி அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர், கலைஞரின் தொடர்ச்சி நான் என நீதிக்கட்சிக்கு சட்டமன்றத்தில் புகழாரம் சூட்டினார்.

இதே போன்று தொடர்ந்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து அவர் தாத்தா PT ராஜன் அங்கம் வகித்த நீதி கட்சியை பற்றி தொடர்ந்து பெருமை பேசி வருவது குறிப்பிடதக்கது, இந்நிலையில் தற்போது இருக்கும் தலைமுறையினர் நிதி கட்சி பற்றி அறியாத சுதந்திர போராட்டத்தின் போது நடந்த சில திடுக்கிடும் தகவலை பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார், அவர் தெரிவித்துளதாவது.

நீதிக் கட்சி ஆட்சியின் தொடர்ச்சி தான் இப்போதைய திமுக ஆட்சி, நீதிக் கட்சியின் தொடர்ச்சி அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர், கலைஞரின் தொடர்ச்சி நான் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையை, இங்கிலாந்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் எதிர்த்தனர்.உலகத்தின்…மனித குலத்தின்…மனசாட்சியை உலுக்கிய கொடூர நிகழ்வு இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை.

உலகமே எதிர்த்த அந்த நிகழ்வை, இந்தியாவில் ஒரே ஒரு கட்சி மட்டும் ஆதரித்து தீர்மானம் போட்டது என்றும், ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஆதரித்து தீர்மானம் போட்ட அந்த ஒரே அரசியல் கட்சி தான் முதல்வர் முக ஸ்டாலின் சொன்ன இப்போதைய திமுக ஆட்சி நீதிக் கட்சியின் தொடர்ச்சி தான் பெருமிதம் கொண்ட நீதிக் கட்சி தான் ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஆதரித்து தீர்மானம் போட்டது என திடுக்கிடும் தகவலை பேராசிரியர் வெளியிட்டுள்ளார்.

மேலும் இது போன்ற நீதிக் கட்சிகளின் பெருமைகள் பற்றி தான் தொடர்ந்து வெளியிட இருப்பதாக தெரிவித்த பேராசிரியர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பி.ராமமூர்த்தி ஆரிய மாயையா? திராவிட மாயையா? என்கிற புத்தகத்தில் இதை குறிப்பிட்டுள்ளார், ஆனால் தற்போது இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு பி.ராமமூர்த்தி பற்றியும் தெரியாது நீதி கட்சியை பற்றியும் தெரியாது என பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.