தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கி சூடு குறித்து, திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி, மக்களிடையே பதற்றத்தைப் பரப்பி உள்ளது. வடமாநிலங்களைப் போல, தமிழகத்திலும் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைதூக்கி வருகிறதோ என்ற அய்யப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சவுகார்பேட்டையில் மூன்று கொலைகள்; கொலை செய்ய, காஞ்சிபுரத்தில் கொலையாளிகள் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஒருவர் கொலை; பழனியில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலத்த காயம். தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் தொடர்ச்சியாகத் தலைவிரித்து ஆடுகிறது.
கள்ளத்துப்பாக்கிகள் கணக்கற்றுப் போய் விட்டன. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி, சுயவிளம்பரத்திலும், அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வதிலும் மட்டும் முக்கிய கவனம் செலுத்துகிறாரா? என தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார் முக ஸ்டாலின், இதற்கு பதிலளித்துள்ள பிரபல பத்திரிகையாளர் மதன் ரவிசந்திரன்,
சில மாதங்களுக்கு முன் திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் வீட்டின் அருகே உள்ள குடோனில் இருந்து துப்பாக்கி, 3 கிலோ அளவிற்கான ஈய குண்டுகள், ஒருகிலோ அளவிலான ஏர்பிஸ்டல், 50 பயன்படுத்தப்பட்ட குப்பிகள், 6 ரைபில்கள், ஒரு குழல் துப்பாக்கி மற்றும் குப்பிக்குண்டுகள் தயாடிக்கும் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்ட செய்தியை சுட்டி காட்டிய மதன், தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரத்துக்கு விதை உங்கள் மகன் மான்கறியார் ஆதரவு MLA திருப்போரூர் மான்வேட்டை புகழ் இதயவர்மன் போட்டது என்றும்.
மேலும் அந்த விவகாரத்தை எளிதாக கடந்து போறீங்களே ஸ்டாலின் அவர்களே, பதமா ரெடி ஆயிட்டு இருக்கு தென்னகத்து சல்மான்கானுக்கு ஆப்பு, என மான்கறி விவகாரம் தொடர்பாக உதயநிதிக்கு எதிராக வலுவான ஆதாரம் திரட்டப்பட்டது வருவதாக மறைமுகமாக திமுக தலைவர் முக ஸ்டாலினை எச்சரித்தார் பிரபல பத்திரிகையாளர் மதன் ரவிசந்திரன்.