வரும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீட்டு குறித்து அதிமுக மற்றும் திமுக தாலமையிலான கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், கடந்த வாரம் தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அதிமுக கூட்டணியை உறுதி செய்ததை தொடர்ந்து அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது, மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக ஆகிய காட்சிகள் இன்னும் கூட்டணியை உறுதி செய்யவில்லை.
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக போன்ற காட்சிகள் அதே கூட்டணியில் தொடருமா அல்லது மாற்றம் ஏற்படுமா என்கிற குழப்பம் நீடித்து வருகிறது, இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு குறித்து அதிரடி காட்டி வருகிறது திமுக, கடந்த சட்டசபை தேர்தலில் 40 தொகுதிகளும், நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கிய நிலையில், இம்முறை 10 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என திமுக பிடிவாதமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படும் என திமுகவிடம் இருந்து அந்தந்த கட்சிகளுக்கு தகவல் சென்றுள்ளது, மற்ற கட்சிகளுக்கு வழங்கப்படும் தொகுதிகள் குறித்து தகவல் அறிந்த விசிக தலைவர் திருமாவளவன், நமக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது திமுகவிடம் இருந்து தகவல் வந்ததும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை தொடங்குவோம் என காத்திருந்த திருமாவளவனை கண்டுகொள்ளவே இல்லை திமுக.
இதனை தொடர்ந்து திமுக முக்கிய தலைவர் ஒருவரை தொடர்பு கொண்ட திருமாவளவன், தொகுதி பங்கீடு குறித்து பேசியுள்ளார் அதில் வரும் தேர்தலில் 8 முதல் 10 தொகுதி வரை போட்டியிட விரும்புவதாக திருமா தெரிவித்துள்ளார், அதற்கு தலைமையிடம் கேட்டு சொல்வதாக சொன்ன முக்கிய தலைவர், இதுகுறித்து திமுக தலைமையிடம் பேசியதில், இரண்டு தொகுதிகளுக்கு மேல் ஒரு தொகுதி கூட கூடுதலாக ஒதுக்க முடியாது, உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என தெரிவித்துள்ள திமுக தலைமை, இதை நீங்கள் திருமாவளவனை தொடர்பு கொண்டு கூறவேண்டாம், அவர் மீண்டும் உங்களை தொடர்புகொண்டு கேட்டால் சொன்னால் போதும் என்றும், மேலும் திருமாவளவன் நம்மை தொடர்பு கொண்டு பேசும் நிலைக்கு வைத்து கொள்ளுங்கள், நாம் அவரை தொடர்பு கொண்டால் தொகுதி ஒதுக்கீட்டில் ரெம்ப கிராக்கி செய்வார் என திமுக தலைமை அந்த முக்கிய தலைவரிடம் வலியுறுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து காத்திருந்து பதில் வராததால் பேச்சுவார்த்தைக்கு சென்ற திமுக முக்கிய தலைவரை திருமாவளவன் தொடர்பு கொண்டு பேசிய போது, திமுக தலைமை தொகுதி பங்கீட்டில் பிடிவாதமாக இருப்பதாகவும் இரண்டு தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது போன்ற தகவல்களை தெரிவித்துள்ளார். இதற்கு கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி பதில் அளிப்பதாக திருமாவளவன் கூறியதற்கு, ஒன்றும் அவசரமில்லை மெதுவாக உங்கள் முடிவை கூறுங்கள் என திருமாவளவனிடம் பேச்சுவார்த்தை நடத்திய திமுக முக்கிய தலைவர் கூறினாராம்.