திமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு இழைத்த கொடுமைகள் சொல்லில் அடங்காது என தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் தெரிவித்துள்ளார், மேலும் அவர் கூறியதாவது, நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தமிழக முஸ்லிம் சமுதாய மக்கள் மிகவும் விழிப்புடனும், கவனமாகவும் செயல்பட வேண்டிய தருணமிது. இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தியது யார்? கோவை குண்டுவெடிப்பு சம்பவம் யார் ஆட்சி காலத்தில் நடந்து அதன் பின்னனியில் அப்போது இருந்தவர்கள் யார்? திமுக ஆட்சியில்தான். இவை அனைத்தும் நடந்தது. இதை யாரும் மறுக்கமுடியாத
திமுவின் பொய் முகத்திரையை இஸ்லாமியர்கள் ஒருங்கிணைத்து கிழித்தெறிய வேண்டும். அப்பாவி
இஸ்லாமிய மக்கள் இன்று வரை சிறைகொட்டடியில் எந்தவிதமான விசாரணையும் இன்றி தன் வாழ்நாள்
முழுவதையும் கழித்து வருகிறார்கள். இது மட்டுமின்றி கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள வியாபார
நிறுவனங்கள் அழிந்தன. இதை செய்தவர்கள் யார்? இதன் பின்னனி என்ன என்பது பற்றி இன்று திமுகவுடன்
கூட்டணி வைத்துள்ள இஸ்லாமிய கட்சிகளுக்கு தெரியும்.
பதவி சுகத்திற்காக திமுகவுடன் கூட்டணி. திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அப்பாலி இஸ்லாமியர்களை விடுதலை செய்தார்களா? ஏன் செய்யவில்லை யார் இஸ்லாமியர்களின் பாதுகாவலர் இஸ்லாமியர்கள் எண்ணி பார்க்க வேண்டும் திமுகவின் முகத்திரையை கிழிக்க வேண்டும். மாண்புமிகு மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் இல்லை என்று சொன்னவர். ஆயிஷா என்ற பெண் தீவிராவதியை தேடுகிறோம் என்ற போர்வையில் திமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு இழைத்த கொடுமைகள் சொல்லில் அடங்காது.
கொஞ்ச நஞ்சமல்ல புரட்சி தலைவி அம்மா அவர்ளின் ஆட்சியில்தான் அவையாவும் நிறுத்தப்பட்டது. இன்று வரை இஸ்லாமியர்களின் அரணாக இருப்பது அஇஅதிமுக தான் என்பதை நாம் மறந்து விட வேண்டாம். இப்போது புதிதாக இஸ்லாமி மக்களை பயம் காட்ட திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கையில் எடுத்து இருக்கும் ஆயுதம் குடியுரிமை சட்டம் பற்றியது மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டமன்றத்திலேயே இந்த கேள்விக்கு பதிலாக திமுகவின் முகத்திரையை கிழித்தெறிந்தார்கள். யாராவது ஒரு தமிழ்நாட்டில் பிறந்த முஸ்லீமாவது இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக நான் நின்று தடுப்பேன் என்று சொன்னவர் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.
அடுத்ததாக திமுகவினர் சொல்வது என்ன? அஇஅதிமுக. பிஜேபியுடன் கூட்டணி என்பது தான் நாம்
ஓர் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும். அதுதான் அஇஅதிமுகவின் கூட்டணி வேறு கொள்கை வேறு
என்பது நாம் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அஇஅதிமுகவுடன் தான் கூட்டணி என்பதை மறந்துவிட வேண்டாம்.
தமிழகத்தை ஆள்பவர்கள் சாதி, மத சார்பற்றவர்களாக நல்லாட்சி தருபவர்களாக இருக்க வேண்டும்,
அஇஅதிமுக ஆட்சியில் தமிழகம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இஸ்லாமியர்கள் நாம் அனைவரும்
ஒன்றுபட்டு நடைபெற உள்ள 2021 சட்டமன்ற பொது தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளர்களை ஆதரித்து
பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
பெற செய்து, மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அஇஅதிமுக ஆட்சி அமைய உத்வேகத்துடன் தமிழ் மாநில முஸ்லிம் லீக் பாடுபடும் என தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் தெரிவித்துள்ளார்.