கடந்த 6 ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு பதிவுகள் முடிந்து, வாக்கு பதிவு செய்யப்பட்ட மின்னனு இயந்திரம் சீல் வைக்கப்பட்டு வாக்கு என்னும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே பலத்த பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது, தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து வாக்கு என்னும் மையத்தை சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதில் முதல் அடுக்கு பாதுகாப்பில் மத்திய ஆயுத போலீஸ் படையினர்.
இரண்டாவது அடுக்கில் பட்டாலியன் மற்றும் மூன்றாம் அடுக்கில் சுமார் 150க்கு மேற்பட்ட காவலர்கள் கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் அடங்கிய மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், மாவட்ட அளவில் சிறப்பு துணை நடுவர் தலைமையில் நாளொன்றுக்கு ஆறு நபர்களும் மற்றும் காவல்துறை சார்பில் கண்காணிப்பு பணியில் ஒரு கட்டுப்பாட்டு அறையுடன் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவை அனைத்து பாதுகாப்பும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் உள்ளது, சிசிடிவி கேமரா மூலம் பதிவாகும் காட்சிகளை 24 மணி நேரமும் பார்வையிட்டு கண்காணிப்பதற்காக துணை ஆட்சியர் நிலையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகின்றனர், கட்டுப்பாட்டு அறையின் வேட்பாளர்களின் முகவர்கள் உடனிருந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்படி உச்சகட்ட பாதுகாப்பில் உள்ள மின்னணு வாக்கு பதிவு இருக்கும் மையங்கள் மீதும் தொடர்ந்து வதந்திகள் பரவி வருகிறது, தென்காசியில் வாக்கு பெட்டி இருக்கும் இடத்தின் பின் புறம் உள்ள சாய் நகரில் மர்மமான கண்டெய்னர் இருப்பதாக தொண்டாமுத்தூர் திமுக ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் காஞ்சனாபிளாத்தி தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார், இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது,
இதனை தொடர்ந்து அந்த கண்டெய்னர் மேலே ஆன்டெனா இருப்பதாகவும், இந்த கண்டெய்னர் உள்ளே ஆட்கள் அமர்ந்து மின்னணு வாக்கு மெஷினை ஹேக் செய்ய போவதாக வதந்திகள் பரவியது, இதனை தொடர்ந்து அந்த புகைப்படம் குறித்து ஆராய்ந்ததில், அந்த புகைப்படத்தில் ஆன்டெனா போன்று தெரிவது பின்னல் இருக்கும் காற்றாலை விசிறி என தெரியவந்துள்ளது, மேலும் அந்த கண்டெய்னர் காற்றாலை மின்சாரம் சேமிக்க கூடிய ஸ்டோரேஜ் பேட்டரி உள்ள கண்டெய்னர் என கூறப்படுகிறது.