தமிழக்தின் ஆளும் கட்சியாக இருப்பது திமுகவா? அல்லது விடுதலை சிறுத்தை கட்சியா? என்று மக்கள் கேள்வி எழுப்பும் அளவுக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆட்டம் வரம்பு மீறி உள்ளதாக பொதுமக்கள் அதிருப்த்தி தெரிவித்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தமிழகம் முழுவது திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சுவர் விளம்பரங்கள் தமிழக முழுவதும் பல இடங்களில் வரையப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் ஆளும் கட்சி திமுகவுக்கு நிகராக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் புகைப்படங்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர், நகர் பகுதிகளில் குறிப்பாக சென்னை போன்ற முக்கிய நகரங்களில் வெளியூரில் இருந்து வருவோர் கண்களில் எந்த பக்கம் திரும்பினாலும் திருமாவளவன் புகைப்படம் காட்சியளிப்பது, திமுகவினர் மத்தியிலும் கடும் அதிருப்த்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பேருந்து நிறுத்தம், அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் திருமாவளவன் புகைப்படம் சுவர் விளம்பரமாக காட்சியளித்து வந்த சூழலில், புகாரின் அடிப்படையில் மதுரை மாவட்ட காவல்த்துறை நடவடிக்கையை தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் புகைப்படத்துடன் இருந்த சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காவல் துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து, திருமாவளவன் புகைப்படம் அழிக்கப்பட்ட அதே இடத்தில மீண்டும் திருமாவளவன் புகைப்படம் வரைந்தே தீருவோம் என விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர், இந்நிலையில் விடுதலை சிறுத்தை காட்சிகளில் இந்த அராஜக செயலுக்கு பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்த்தி எழுந்துள்ளது.
மேலும் ஆளும் கட்சியான திமுக கூட அடக்கி வசிக்கும் போது அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தை கட்சியினர் அரசு பேருந்துகளில் போஸ்டர் ஒட்டுவது, மக்கள் பயன்பாட்டில் இங்கும் பேருந்து நிலையத்தில் சுவர் விளம்பரம் செய்வது போன்ற செயல்களால் ஆளும் கட்சி திமுகவா.? அல்லது விடுதலை சிறுத்தை கட்சியா .? என பொது மக்கள் கேள்வி எழுப்பும் நிலையில் உள்ளது தமிழக அரசியல் என்பது குறிப்பிடத்தக்கது.