தமிழ்நாட்டில் பிரபலமான எஸ்ஆர்எம் கல்லூரியில் கடந்த சில வருடங்களாக கல்லூரியில் பயின்று வரும் மாணவ மாணவிகள், மற்றும் ஆசிரியைகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு வரும் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த காட்டாங்குளத்தூர் உள்ள எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் தங்கி பயின்று வந்த மாணவர்கள் அனுப்பிரியா, சவுத்ரி, ராகவ் ஆகியோர் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
மேலும் இது போன்று தொடர்ந்து பல தற்கொலை மரணங்கள் எஸ்ஆர்எம் கல்லூரியில் நடந்து வருவது மர்மமமாக உள்ளது, இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக இருந்த 27 வயதுடைய இந்து என்கிற பெண் மருத்துவர் விடுதியில் சுடிதார் துப்பட்டாவால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார், மேலும் மருத்துவ கல்லூரி விடுதியின் துணை வார்டனாகவும் இருந்து வந்த இந்து, அதே விடுதியில் தங்கி மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வந்துள்ளார், இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று இரவு இந்து சாப்பிட வராத காரணத்தினால் அவரை தொலைபேசியில் அதே விடுதியில் தங்கியிருந்தவர்கள் தொடர்பு கொண்ட போது தொலைபேசியை அவர் எடுக்கவில்லை.
இதனை தொடர்ந்து அவருடைய அறைக்கு சென்று பார்த்தபோது அறை கதவு உள்புறமாக பூட்டியிருந்தது, உடனே மருத்துவ கல்லூரி நிர்வாகம் மறைமலை நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, நள்ளிரவில் போலீசார் அங்கு வந்து கதவை உடைத்து திறந்து பார்த்தபோது, அறையின் உள்ளே இருந்த மின் விசிறி கொக்கியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு இந்து தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட இந்துவின் உடலை மீட்ட போலீசார் முதலில் அதே கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அவர் இறந்து விட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர் பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர், இந்த தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் கல்லூரியில் எதாவது பிரச்சனையா அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .