வளைக்காப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதால் ஜிஎஸ்டி கவுன்சலிங் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த விளக்கம் தமிழக அரசியில் பெரும் கேலி கிண்டலை ஏற்படுத்தியது, இது குறித்து பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் இது நெசமாவா கோபால்.? என பதிவு செய்திருந்தார், இதற்கு ஒரு பொறுப்பான மாநில நிதியமைச்சர், இந்த தகவல் பொய்யானது என விளக்கம் கொடுத்திருக்கலாம் அல்லது தன்னை கிண்டல் செய்யும் நோக்கில் கூட பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என கடந்து சென்று இருக்கலாம் ,
ஆனால் அவர் தனது பதில் பதிவில், வடிகட்டிய முட்டாள்தனம் என்றும்,மேலும், கூட்டம் நடந்தது டெல்லியில் இல்லை லக்னோவில், எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும், பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா என பொது தளத்தில் ஒரு பெண் என்று கூட பாராமல் கேள்வி எழுப்பிய பெண்ணுக்கு அவர் அநாகரிகமாக பதிலளித்துள்ள சம்பவம் மீண்டும் பழனிவேல் தியாகராஜனை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது
இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தன்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட அனைத்து வங்கிகளையும் ஒரு வழி பண்ணியாச்சு, எப்போது பேசினாலும் ஒருவித பதட்டத்துடனே இருப்பது, கேள்விகளை சமாளிக்க முடியவில்லை என்றால் உடனே அவர்களது ‘உயர்ந்த பாரம்பரியத்தை’ வெளிப்படுத்துவது, யாரேனும் அவரது கருத்துக்களை விமர்சித்தால் உடனே தரக்குறைவான நாகரீகமற்ற வகையிலே பதில் அளிப்பது…தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என அரசியல் கருத்து தெரிவிக்க மீண்டும் அநாகரிகமாக பதிலளித்திருந்தார் பழனிவேல் தியாகராஜன்.
இந்த சர்ச்சை குறித்து, திமுக எம்பி, TKS இளங்கோவன் ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், முதல்வர் முக ஸ்டாலின் ஏற்கனவே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார், மேலும் அரசியலில் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என நான் உட்பட பல மூத்த திமுக தலைவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்கள், ஆனால் மீண்டும் உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொள்ள கூடாது என்றும்.அரசியலில் பக்குவமாக செயல்பட வேண்டும் என பழனிவேல் ராஜன் குறித்து பேசினார் TKS இளங்கோவன்.
எதிர்க்கட்சி தலைவர்களை தான் இதுவரை அநாகரிகமாக விமர்சனம் செய்து வந்த பழனிவேல் தியாகராஜன், தனது சொந்த கட்சியை சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் TKS இளங்கோவன் அவர்களையும் கடுமையாக பெயர் குறிப்பிடாமல் விமர்சனம் செய்துள்ளது திமுகவினர் மத்தியில் பழனிவேல் தியாகராஜனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில்.
தமிழ் நாட்டின் நிதி அமைச்சராக இருக்கக் கூடியவர் தன் தினசரி வேலைகளை திறம்பட செய்வதற்கும் சரியான முடிவுகளை எடுப்பதற்கும் ஒரு தெளிவான மனநிலையில் இருக்க வேண்டும். நிதியமைச்சர் உடன் வேலை செய்யும் நபர்களையும் நிதி அமைச்சகத்தையும் ஆபத்தான சூழ்நிலையில் விட்டுவிடாமல் தமிழக முதலமைச்சர் பார்த்துக் கொள்ள வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ள நிலையில், தெளிவான மனநிலையில் இருக்க வேண்டும் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளது, அப்படியானால் தமிழக நிதியமைச்சர் மனநிலை சரியில்லாதவர் என அண்ணாமலை குறிப்பிடுகிறாரா என கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.