பெயருக்கு பின்னால் கவுண்டர் என குறிப்பிடுவது அவமானமா.? சர்ச்சையில் சிக்கிய திமுக எம்பி செந்தில்.! கடும் கொந்தளிப்பில் கவுண்டர் சமூகம்.!

0
Follow on Google News

திமுக தர்மபுரி எம்பி அதிகம் நேரம் சமூக வலைதளத்தில் தனது நேரத்தை செலவு செய்யக்கூடியவர், தொகுதி பக்கம் இவரை காண்பது அறிது என கூறும் தர்மபுரி தொகுதி மக்கள், இவரை பார்க்க வேண்டுமானால் அவரது டிவீட்டர் பக்கம் சென்று பார்த்தால் யாருடனாவது வம்பிழுத்து சண்டையிட்டு பொழுதை கழித்து கொண்டிருப்பதை பார்க்க முடியும் என்கின்றனர். இந்நிலையில் தற்போது பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமனிடம் வம்பிழுத்து பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் திமுக எம்பி செந்தில்குமார்.

திருச்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் டாக்டர் ராஜ் ஐயர் இவர் அமெரிக்காவில் ஒரு துறையில் சாதனை படைத்துள்ளார், இதற்கு பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தனது வாழ்த்துக்களை தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார், இந்நிலையில் யாரிடமாவது அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வம்பிழுத்து பொழுதை கழித்து வரும் திமுக எம்பி செந்தில் குமார் இந்த விவகாரம் குறித்து தனது டிவீட்டர் பக்கத்தில், பெரியாரின் சமூக நீதி சாதனை உங்க பெயருக்கு பின்னல் சுமந்த் ராமன் ஐயர் என போட முடியவில்லை. என்ன ஒரு பரிதாபம். உங்களுக்கு என்ன சார், நீங்க தான் CDO -Chief Defence Officer of ADMK. அப்போறோம் என்ன கவலை என சுமந்த் சி ராமனை வம்பிழுக்கும் வகையில் பதிவு செய்திருந்தார்.

இதற்கு சுமந்த் சி ராமன், ஒரு இந்திய வம்சாவளியினர், ஒரு தமிழர் , திருச்சியை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் சாதனை படைத்துள்ளார் என்று வாழ்த்தினேன். ஆனால் உங்களுக்கு அவர் ஜாதி தான் தெரியுது. வெறுப்பு அரசியலிலிருந்து வெளியே வாங்க. என தெரிவித்தவர் மேலும், ஒரு வீடியோ பார்த்தேன் சார்.அதுல உங்கள மாதிரியே ஒருத்தர் மீடியா கிட்ட பேசறாரு. அதுல அவர் தாத்தா பெயர் வடிவேல் கவுண்டர்னு சொன்னாரு.வடிவேல் அவருடைய பெயர். கவுண்டர் அவர் வாங்கிய பட்டமா சார்? நான் கரையை சேர்ந்துட்டேன். நீங்க? என செந்தில்குமார் எம்பி தொலைக்காட்சி பேட்டியில் தனது தாத்தா பெயர் வடிவேலு கவுண்டர் என குறிப்பிட்டதை மறைமுகமாக சுட்டி காட்டினார்.

இதற்கு தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார், எல்லோருடைய தத்தா பெயரிலும் சாதி அடையாளம் இருந்தது உண்மை தான். என் தந்தை ,என் பெயருக்கு ,என் குழந்தைகள் பெயருக்கு பின்னால், ஏன், சாதி கட்சி நடதுபவர்களே தங்கள் பெயருக்கு பின்னால் எந்த சாதி அடையாளமும் போடுவது இல்லை, இது தான் பெரியாரின் சமூக நீதி சாதித்தது என தனது டிவீட்டர் பக்கத்தில் திமுக எம்பி செந்தில்குமார் பதிவு செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நேரத்தில் திமுக எம்பி செந்தில்குமார் பிரச்சாரத்தின் போது, தான் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன், எனது தாத்தா பெயர் வடிவேலு கவுண்டர் என சாதி ஓட்டுக்களை பெற பிரச்சாரம் செய்து விட்டு தற்போது சாதி அடையாளத்தை தனது பெயருக்கு பின்னால் இருப்பதை அவமானமாக கருதுகிறாரா என அவர் சார்ந்த சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் இந்த விவகாரத்தில் திமுக எம்பி மீண்டும் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்காமல் அமைதியாக இருந்து வருவது தான் அவருக்கு நன்று என கருத்து தெரிவித்து வருகின்றனர்.