நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற மிக பெரிய குழப்பம் நீடித்து வரும் நிலையில், தேர்தல் முடிந்து சில நாட்கள் திமுக தான் ஆட்சி அமைக்கும் என பரபரப்பாக தகவல் வெளியானது, ஆனால் அடுத்த ஒரு வாரத்தில் திமுக – அதிமுக இரண்டு கட்சிகளும் தலா 90 தொகுதிகளில் சம நிலையில் உள்ளது என்றும், மீதம் உள்ள 54 தொகுதிகள் கடும் இழுபறியில் உள்ளது, ஆனால் இழுபறியில் உள்ள தொகுதிகள் பெரும்பாலும் அதிமுக வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து அதிமுக அடுத்து வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தகவல் வெளியானதை தொடர்ந்து, உற்சாகத்தில் இருந்த திமுக தலைமை மற்றும் தொண்டர்கள் அமைதியாக காணப்பட்டனர், மேலும் வாக்கு இயந்திரத்தின் மீது சந்தேகம் ஏற்படும் விதத்தில் அறிக்கை வெளியிட்ட திமுக தலைவரின் பதற்றமான நடவடிக்கைகள் திமுக தொண்டர்களை நம்பிக்கை இழக்க செய்தது, இதனை தொடர்ந்து தற்போது வரை இரண்டு தரப்பினர் தாங்கள் தான் அடுத்து ஆட்சி அமைக்க இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாக்கு பதிவுக்கு பின் அதிமுக பின்னடைவுக்கு காரணம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னிசையாக எடுத்த நடவடிக்கைகள் தான் என அதிமுக முக்கிய தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கினார்கள், தேர்தலுக்கு முன்பு சசிகலாவை அதிமுகவில் இணைக்க மறுத்தது, தேமுதிகவை கூட்டணியில் இருந்து வெளியேற்ற காரணமாக இருந்தது, TTV தினகரன் இணைய தயாராக இருந்தும் மறுத்தது போன்ற எடப்பாடி எடுத்த முடிவுகள் தான் என அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள் அதிமுகவினர்கள்.
இதனை தொடர்ந்து அதிமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி செய்வதற்காக, மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திட்டமிட்டு ஒரு தகவல் பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தலுக்கு பின்பு திமுக வெற்றி அடைந்து ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டால், திமுகவுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சி தலைவராக தன்னை முன்னிருந்த முயன்று வருவதாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிந்த பின்பு அதிமுக ஆட்சியை இழக்க நேரிட்டால், TTV தினகரன் வளச்சிக்கும், மீண்டும் சசிகலா அரசியல் பிரவேசம் எடுத்தால் அதை தடுத்து நிறுத்தவும் தனது அரசியல் நகர்வுகளை எடப்பாடி பழனிசாமி செய்துவருவதாக கூறப்படுகிறது, இதன் ஒரு பகுதி தான் குழப்பத்தில் உள்ள அதிமுகவினரை தன் வசப்படுத்தி கொள்ள மீண்டும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என திட்டமிட்டு ஒரு தகவலை பரப்பியது பின்னணியில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறப்படுகிறது.