திமுக நிர்வாகி ஜெயக்குமார் ஆபாச பதிவின் மூலம் சமூக வலைத்தளத்தில் பிரபலமாக அறியப்பட்டார், இவரை ஆபாச பதிவாளர் என்று சமூக ஊடகத்தில் பலர் இவரை அழைப்பார்கள், இந்நிலையில் தொடர்ந்து பொது வாழ்க்கையில் ஈடுபடும் பெண் அரசியல் தலைவர்களை பாலியல் ரீதியாக இழிவாக பதிவு செய்து வருகின்றவர் ஜெயச்சந்திரன். இந்நிலையில் சமீபத்தில் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் குறித்து ஜெயச்சந்திரன் பாலியல் ரீதியாக பதிவு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து காவல் துறையிடம் புகார் தெரிவிக்கப்ட்டது, மேலும் சமூக ஊடகத்தை சுத்தம் செய்வதாக தம்பட்டம் அடிக்கும் தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் எங்கே என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. மேலும் கடந்த முறை இதே ஆபாச பதிவாளர் ஜெயச்சந்திரன் போலீசார் கைது செய்த போது அவருக்கு ஆதரவாக களத்தில் இறங்கியவர் செந்திகுமார் எம்பி, இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது டிவீட்டர் பக்கத்தில் செந்தில்குமார் எம்பி தெரிவித்ததாவது.
பெண்களை தவறாக யார் சித்தரித்தலும்/அவதூறாக பேசினாலும் தவறு தான் அது திமுக தொண்டர் என்றாலும் தவறு எதிர்வினை இதுவல்ல வழக்கு வாங்கி யாரும் வாழ்கையை தொலைத்து விடாதீர்கள் பிரச்சினை வந்த பின் யாரும் உதவ வரமாட்டார்கள். மேலும் அரசிற்கு முதல்வருக்கு நம்மால் ஒரு சிறு சங்கடமும் வரகூடாது. என செந்தில்குமார் எம்பி தெரிவித்திருந்த நிலையில் இதற்கு பதிலடி தரும் விதத்தில் காயத்ரி ரகுராம் தெரிவித்ததாவது.
நள்ளிரவுக்குள் திமுக நிர்வாகி ஜெயச்சந்திரன் வீட்டிலிருந்தோ அறிவாலயத்திலிருந்தோ அல்லது அவர் எங்கு மறைந்திருந்தாலும் வெளியே தர தரேன்னு இழுத்து பாஜக தொண்டர்களை செய்தது போல் அவரை கைது செய்வீர்களா.? இன்று திமுக எம்பி ட்விட்டரை சுத்தம் செய்வதில் இருந்து ஓய்வு எடுத்தாரா? அல்லது திமுக எம்பி புதுச்சேரியில் உள்ள பல்வேறு உணவகங்களில் உணவை சுவைப்பதில் மும்முரமாக இருப்பாரா? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.
திமுக அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக மட்டுமே குரல் கொடுக்கும், ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மகளுக்காக குரல் கொடுக்காது, இது தான் திமுக. இந்த பயங்கரமான உயிரினங்களிலிருந்து பெண்கள் பாதுகாப்பாக இருங்கள், திமுக நிர்வாகி ஜெயச்சந்திரனை முன்பு காவல் துறை கைது செய்ய முயன்ற போது திமுக எம்பி செந்தில்குமார் காப்பாற்ற முயன்றார், ஆனால் இன்று அவர் தனது டிவீட்டர் பதிவின் மூலம் திமுக நிர்வாகி ஜெயச்சந்திரனை கண்டிக்கிறார். இது வெறும் கண் துடைப்பு என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.